
Today Vegetable Price: கொட்டித்தீர்க்கும் கனமழை…வெங்காயம் விலை உயர்வு..!! ” காய்கறிகளின் விலை பட்டியல் உள்ளே”..!!
தமிழகத்தில் கடந்த 2 வாரங்களாக தொடர்ந்து விடாமல் பெய்த கனமழையால், காய்கறிகளின் விளைச்சல்கள் பெரிதளவில் பாதித்துள்ளன. இதனால் சந்தையில் காய்கறிகளின் விலை சற்று அதிகரித்து காணப்படுகிறது. அந்த வகையில், இன்றைய நாளுக்கான காய்கறிகளின் விலை நிலவரத்தை விரிவாக கீழே பார்க்கலாம்.
சென்னை கோயம்பேடு சந்தையில், 1 கிலோ தக்காளி 30 ரூபாய், 1 கிலோ சின்ன வெங்காயம் 57 ரூபாய், 1 கிலோ பெரிய வெங்காயம் 48 ரூபாய், பீட்ரூட் 39 ரூபாய், உருளைக்கிழங்கு 37 ரூபாய், அவரைக்காய் 41 ரூபாய், முட்டைக்கோஸ் 25 ரூபாய், கேரட் 49 ரூபாய், முருங்கைக்காய் 60 ரூபாய், கத்தரிக்காய் 36 ரூபாய், பீன்ஸ் 56 ரூபாய், பூண்டு 331 மற்றும் இஞ்சி 70 ரூபாய்க்கு மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


























