Today Gold Rate : சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடும் சரிவு… எவ்வளவுன்னு தெரியுமா…?
தமிழகத்தில் டிசம்பர் மாத தொடக்கத்தில் இருந்து தங்கத்தின் விலையானது தொடர்ந்து உயர்ந்து மக்களுக்கு அதிர்ச்சி அளித்து வந்தது. இந்நிலையில், எப்போது தங்கத்தின் விலை குறையும் என எதிர்பார்த்த மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக தங்கத்தின் விலையானது இன்று சரிவை சந்தித்துள்ளது. அந்த வகையில், இன்றைய நாளுக்கான தங்க விலை நிலவரத்தை கீழே விரிவாக காண்போம்.
அதாவது, சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 200 சரிந்து ரூ. 56,920 க்கு விற்பனையாகி வருகிறது. அதே போல், ஒரு கிராம் தங்கம் ரூ. 7,115 க்கு விற்பனையாகி வருகிறது.
























