Today Gold Rate: சென்னையில் தாறுமாறாக உயரும் தங்கம் விலை.. !! சவரனுக்கு எவ்வளவு தெரியுமா..?
தமிழகத்தில் தங்கத்தின் விலையானது கடந்த சில மாதங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், தங்க விலை நிபுணர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தங்கத்தின் விலையானது விரைவில் ரூ.80,000 மேல் தாண்டும் என கூறினார். தற்போது, அதற்கு ஏற்றாற்போல தங்கத்தின் விலையானது ஜெட் வேகத்தில் தாறுமாறாக உயர்ந்து வருகிறது. அந்த வகையில், இன்றைய நாளுக்கான தங்கம் விலை நிலவரத்தை கீழே விரிவாக காண்போம்.
அதாவது, சென்னையில் இன்று ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.57,000க்கு விற்பனையாகி வருகிறது. அதே போல், ஒரு கிராம் ரூ. 7,125க்கு விற்பனையாகிறது.



























