
“பொது சிவில் சட்டம் இன்று (27.01.2025) முதல் அமலுக்கு வந்தது …!!” முதல் மாநிலம் என்ற பெருமையை பெற்றது உத்தரகாண்ட் ….!!
உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களைவை தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்று புஷ்கர் சிங் தாமி முதல்வராக பதவியேற்றார். மேலும், அவர் ‘யு.சி.சி எனப்படும் பொது சிவில் திட்டத்தை அமலுக்கு கொண்டு வருவேன்’ என தேர்தல் வாக்குறுதி அளித்து இருந்தார். மேலும், இந்த திட்டம் மூலம் அனைத்து மதத்தை சேர்ந்தவர்களுக்கும் திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை மற்றும் சொத்துரிமை போன்றவற்றில் ஒரே மாதிரியான சமமான விதிகளை ஏற்படுத்த திட்டமிடப்பட்டது. மேலும், திருமண ஆனவர்கள் மற்றும் திருமணம் ஆகாமல் சேர்ந்து வாழ்பவர்கள் இந்த திட்டத்தில் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்.
அந்த வகையில், கடந்த பிப்ரவரி 7, 2024 ஆம் தேதி உத்தரகாண்ட் சட்டப்பேரவையில் இந்த பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. மேலும்,இந்த திட்டத்தை கொண்டு வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு அரசு அலுவலர்களுக்கு பயிற்சிகளும் வழங்கப்பட்டது. இந்நிலையில், அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி இந்த திட்டத்தை இன்று (27.01.2025) முதல் அமலுக்கு கொண்டு வந்தார். மேலும், ‘பொது சிவில் சட்டத்தை முதன் முதலில் அமல்படுத்திய மாநிலம் என்ற பெருமையை உத்தரகாண்ட் பெற்றுள்ளது” குறிப்பிடத்தக்கது
























