தமிழக அரசில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு 2024 – ரூ.25,000/- மாத ஊதியம்!

0
தமிழக அரசில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு 2024 - ரூ.25,000/- மாத ஊதியம்!

 திருவண்ணாமலை மாவட்ட, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் (TNSRLM) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. MIS Analyst பணியிடம் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (TNSRLM)
பணியின் பெயர் MIS Analyst
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 29.02.2024
விண்ணப்பிக்கும் முறை Offline

TNSRLM காலியிடங்கள்:

TNSRLM நிறுவனத்தில் MIS Analyst பணிக்கென ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.

MIS Analyst கல்வி:

MIS Analyst பணிக்கு BE, B.Tech, MCA, M.Sc டிகிரியை அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

அஞ்சல் அலுவலக SCSS திட்டம் 2024:  ஒவ்வொரு காலாண்டிலும் ரூ.12,300 வட்டி || முழு விவரம் இதோ!

MIS Analyst வயது:

இந்த தமிழக அரசு சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 30 வயதுக்கு கீழுள்ளவராக இருக்க வேண்டும்.

MIS Analyst மாத ஊதியம்:

MIS Analyst பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்கள் ரூ.25,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.

TNSRLM தேர்வு செய்யும் முறை:

இந்த TNSRLM நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

TNSRLM விண்ணப்பிக்கும் வழிமுறை:

MIS Analyst பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்தை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சான்றிதழ்களின் நகலுடன் இணைத்து அறிவிப்பில் தரப்பட்டுள்ள முகவரிக்கு 29.02.2024 அன்றுக்குள் அனுப்ப வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!