விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் ரூ.50,000/- ஊதியத்தில் வேலை

2
விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் ரூ.50,000 ஊதியத்தில் வேலை
விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் ரூ.50,000 ஊதியத்தில் வேலை

 

விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் ரூ.50,000/- ஊதியத்தில் வேலை

விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில், ஒன்றியத் தலைப்பில் அருப்புக்கோட்டை, சாத்தூர் மற்றும் நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், இரவுக்காவலர் மற்றும் ஈப்பு ஓட்டுநர் காலிப்பணியிடத்தினை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் 25-01-2021 க்குள் தபால் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை
பணியின் பெயர் அலுவலக உதவியாளர், இரவுக்காவலர் மற்றும் ஈப்பு ஓட்டுநர்
பணியிடங்கள் 03
கடைசி தேதி 25.01.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
ஊரக வளர்ச்சி துறை காலிப்பணியிடங்கள்:
  • அலுவலக உதவியாளர் – 01
  • இரவுக்காவலர் – 01
  • ஈப்பு ஓட்டுநர் – 01
விருதுநகர் மாவட்ட கல்வி தகுதி:
அலுவலக உதவியாளர்:
  • 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
இரவுக்காவலர்:
  • எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
  • மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
ஈப்பு ஓட்டுநர்:
  • 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மோட்டார் வாகனச் சட்டம் 1988 (மத்திய அரசுச் சட்டம்59/1988)-ன்படி கீழான தகுதியுடைய அலுவலரால் வழங்கப்பட்ட ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
  • வாகனம் ஓட்டுவதில் 5 ஆண்டுகளுக்கு குறையாத அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
  1. அலுவலக உதவியாளர் – ரூ.15,700/- (15700-50000).
  2. இரவுக்காவலர் – ரூ.15,700/- (15700-50000).
  3. ஈப்பு ஓட்டுநர் – ரூ.19,500/- (19500-62000)
வயதுவரம்பு :

01.07.2020 அன்று விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

TNRD விண்ணப்பிக்கும் முறை:

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 04.01.2021 முதல் 25.01.2021 பிற்பகல் 05:45 மணிக்குள் “ஆணையாளர், ஊராட்சி ஒன்றியம், அருப்புக்கோட்டை” என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமோ அனுப்ப வேண்டும். காலதாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

Notification 1 || Notification 2 || Notification 3 

Download Application Form

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!