முக்தி மார்க்கங்கள்

0
முக்தி மார்க்கங்கள்
 • ஆணவம், கன்மம், மாயை எனப்படும் மூன்று தளைகளை நீக்கி முதல்வனை தலைப்படுவது – வீடுபேறு (அ) மோட்சம் (அ) சிவத்துவ அபிவியக்தி
 • பரமபதம் — எல்லாவற்றிலும் உயர்ந்த கதியாய் காண்பானும், காட்டுவதும் தோன்றாது அனுபவித்து அறிவது.
 • ‘பாசத்தை பசுக்கள் விட்டு பதியினை அடைவதே முக்தி” சிவஞானசித்தியார்.
 • ‘சேர்வார் தாமே தானாகச் செய்யும் அவன்” – திருஞானசம்பந்தர்
 • சிவனோடு இரண்டற கலந்து பிரியாது அவனை பற்றும் நிலை – சாயுஜ்ஜியம்
 • சோபானக்கிரமம் என்பதன் பொருள் – படிவழிமுறை
 • வீடுபேறு (அ) முக்தி அடைவதற்குரிய மார்க்கங்கள் எண்ணிக்கை – 4

 • நால்வகை மார்க்கங்களையும் , அரும்பு,மலர்,காய், கனிக்கு ஒப்பிட்டு விளக்கியவர் – தாயுமானவர்.
 • ‘பற்றுக பற்றற்றான் பற்றினை” – திருக்குறள்.

சரியை மற்றும் கிரியை சரியை மற்றும் கிரியை

 • இறைவனின் உருவடிவம் ஒன்றினையே பொருள் என உணர்ந்து இயற்றப்படும் வழிபாடு – சரியை
 • இறைவனின் அருவுருவம் (அ) லிங்கம் ஒன்றினையே பொருள் என உணர்ந்து அகம்புறம் இரண்டாலும் இயற்றப்படும் வழிபாடு – கிரியை (சிவபூஜை, சிவதன்மம்)
 • சிவபூஜைக்கு செய்யப்படும் சுத்திகளின் எண்ணிக்கை – 5 (பூத, தான, திரவிய, மந்திர மற்றும் லிங்க சுத்திகள்)
 • ‘அன்பினில் விளைந்த ஆரமுதே” ‘ஈறிலா பதங்கள் யாவையும் கடந்த இன்பமே என்னுடைய அன்பே” ‘அன்பே சிவமாவதாரும் அருகிலர்” ‘அன்பில் ஊன்ற உள்ளெழும் சோதியாய் நின்றனன்” — திருமுறைகள்.
 • ‘விரும்பும் சரியை முதல் மெய்ஞானம் நான்கும் அரும்புமலர் காய்கனிபோல் அன்றோ” – தாயுமானவர்.
 • ‘இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு” – திருக்குறள்.
 • இறையுலகத்தில் உள்ள இன்பங்களை நுகர்ந்து வாழுதல் – சாலோகம்.
 • இன்பத்தோடு ஒரு புதல்வனை போல இறைவன் அருகில் அமரும் நிலை – சாமீபம்
 • இறைவன் உருவம் போன்று உருவந்தாங்கி இன்பம் நுகரும் நிலை – சாரூபம்
 • இறைவனோடு நித்தியானந்தம் அனுபவித்து பிறவியை அறுத்து நீடூழி காலம் வாழும் நிலை – சாயுஜ்ஜியம்.

யோகம்

 • பக்தன் தன் வெளித்தோற்றம் துறந்து உள்ளடங்கி இறைவனோடு ஒன்றும் நிலை — யோகம்.
 • இறைவனின் அருவம் ஒன்றினையே பொருள் என உணர்ந்து இயற்றப்படும் வழிபாடு – யோகம்.
 • யோகியர் அடையும் சித்திகளின் எண்ணிக்கை – 8
 • யோகத்தின் அங்கங்களின் எண்ணிக்கை – 8
 • யோகத்தின் வகைகள்: 1)இயமம் 2)நியமம் 3)ஆசனம் 4)பிராணயாமம் 5)பிரத்தியாகாரம் 6)தாரணை 7)தியானம் 8)சமாதி
 • இயமம் – தன்னை அடக்குதல் (10 வகைப்படும்)
 • பொதுவொழுக்கத்தில் அடங்குவது – இயமம், நியமம்.
 • நியமம் — தன்னை நிச்சயித்து கொள்ளுதல் (10 வகைப்படும்)
 • ஆசனம்(இருக்கை) — யோகத்தை ஒழுங்காக நடத்த உடம்பை அமரச் செய்தல்
 • பிராணாயாமம் (வளிநிலை) – (பிராணவாயுவை மந்திர ஜபத்தோடு (அ) எதுவுமின்றி அடக்குவது)
 • பிரத்தியாகரம்(தொகைநிலை) – மனதை ஐம்புலவழி செல்லவிடாமல் ஒருமுகப்படுத்துதல்
 • தாரணை(பொறைநிலை) – முதலில் உபதேசம் பெற்று நிம்மதியான தியானத்தில் இருக்கும் நிலை.
 • தியானம்(நினைதல்) — மனதை சலனமின்றி இறைவனுடன் நிறுத்துதல்
 • சமாதி(அதுவாதல்) – மனம், சுயபோகத்தை இழந்து இறையருளில் தோய்ந்து நிற்பது.

ஞானம்

 • இறைவனின் அருள்வழிநிற்றல் – ஞானம்
 • ஞானத்தின் மூலமாக கிடைக்கும் நிலை – வீடுபேறு (அ) பரமுத்தி (அ) சாயுஜ்ஜியம் (அ) பரமலட்சியம்.
 • ‘ஞானம் ஈசன்பால் அன்பே என்றனர்” – பெரியபுராணம்
 • சாத்திரம் ஆராய்ந்து அவற்றின் சாரத்தை குருவினிடம் கேட்டு, கேட்டவற்றை சிந்தித்து தெளிந்து, தெளிந்ததை மேற்கொண்டு, ஞானம் (அறிவு) ஞாதிரு(அறிபவன்), ஞேயம் (அறிபடுபொருள்) இவற்றை கடந்து பரம்பொருளின் நிர்விகற்ப ஞானத்தால் செய்யும் ஆராதனை.

 • பசுஞானம் – தற்சொரூபமறியாது சந்தேகப்பட்டு நிற்கும்
 • பாசஞானம் – உலகப்பொருளை ஒருவாறு அறியும் எனலாம்
 • பதிஞானமே உண்மையானது. அதுவே பிரம்மஞானமாகும்.
 • ஞானமானது கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிஷ்டை என நால்வகைப்படும்.
 • இவற்றை கடைபிடிக்க பரமுத்தி கிடைக்கும்.
 • சிவபுண்ணியத்தின் பயனாய் அறிவின்கண் ‘இருவினையொப்பு” எனும் குறிதோன்றும்.
 • அதாவது நல்வினை,தீவினை இரண்டையும் சமமாக பாவிக்கும் பண்பு.
 • இருவினையொப்பின்கண் நிகழ்வன: 1)மலபரிபாகம் 2)சத்திநிபாதம்
 • மலபரிபாகம் – மலசக்திகள் தேய்ந்து அகலுதற்குரிய பருவம் எய்துதல்.
 • சத்திநிபாதம் – மலபரிபாகம் நிகழும்போது இறைவன் அருள் உயிரின்கண் பதியும். இப்பதிவு சத்திநிபாதம். இதில் நிகழ்வது மெய்யுணர்வு.
 • குரு = கு + ர்+ உ: கு – மலம்: ரு – நீக்குபவர்:
 • ‘குருட்டினை நீக்கும் குருவினை கொள்ளார்” – திருமூலர்.

PDF Download

TNPSC சைவம் & வைணவம் பாடக்குறிப்புகள் Download

TNPSC Current Affairs in Tamil 2018

Download TNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள்

Download TNPSC பொது தமிழ் பாடக்குறிப்புகள்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!