TNPSC தேர்வர்களின் கவனத்திற்கு – முந்தைய ஆண்டு தேர்வு வினாக்கள் இதோ!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது போட்டி தேர்வுகள் நடத்துவதன் மூலம் தகுதியானவர்களை தேர்வு செய்து பணியமர்த்தி வருகிறது. பொது தமிழ் பாடத்தை மையமாக கொண்டு தேர்வுகள் நடத்தப்படுகிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெற முந்தைய ஆண்டு தேர்வு வினாக்கள் படிப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே தேர்வர்களுக்கு உதவும் வகையில் முந்தைய ஆண்டு தேர்வு வினாக்களின் தொகுப்பு கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
1. ‘கேண்மை’-இச்சொல்லின் எதிர்ச்சொல்.
(A) துன்பம்
(B)பகை
(C) நட்பு
(D) வலிமை
விடை: (B)
2. ‘பாலை நிலத்திற்குரிய பறவைகள்’ எவை?
(A) கிளி , மயில்
(B) நாரை, அன்னம்
(C) புறா,பருந்து
(D) கடற்காகம்
விடை : (C)
PM கிசான் திட்டத்தில் கணக்கு வச்சுருக்கீங்களா? மிஸ் பண்ணாம தெரிஞ்சுக்கோங்க!
3. “இரட்டைக்கிளவி இரட்டிற் பிரிந்திசையா” எனக் குறிப்பிடும் நூல்
(A) தொல்காப்பியம்
(B) நன்னூல்
(C) அகப்பொருள்
(D) அகத்தியம்
விடை : (B)
4. தொழிற்பெயரைக் கண்டறிக.
‘வா’-
(A) வருதல்
(C) வந்தான்
(B) வந்து
(D) வந்த
விடை : (A)
5. அகர வரிசையில் அமைந்துள்ள சொற்களைக் கண்டறிக
(A) காசு,கூறை, கைப்பிடி,கிளி, கேணி
(B) காசு,கிளி,கூறை, கேணி, கைப்பிடி
(C) கிளி, கைப்பிடி, காசு, கூறை, கேணி
(D) கேணி,காசு, கிளி,கூறை, கைப்பிடி
விடை : (B)

























