TNPSC தேர்வில் பாஸ் ஆகணுமா? இது உங்களுக்கு யூஸ் ஆகும்!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது குரூப் 1, 2 ,4 என பல்வேறு தேர்வுகள் மூலம் அதன் காலிப்பணியிடங்கள் நிரப்பி வருகிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு முறையான பயிற்சி என்பது மிகவும் முக்கியம். எனவே தேர்வர்களுக்கு உதவும் வகையில் பொது தமிழ் பாடத்தில் முந்தைய ஆண்டில் கேட்கப்பட்ட கேள்வி கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.இது தேர்வர்களுக்கு தேர்வில் தேர்ச்சி பெற பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
1. பாரதிக்கு ‘மகாகவி’-என்ற பட்டம் கொடுத்தவர் யார்?
(A) வ.ரா
(B) உ.வே.சா
(C) கி.ஆ.பெ.வி
(D) லா.ச.ரா
விடை : (A)
2. “தெண்டன் இட்டது வள்ளுகிர் திண்டிறல் புலியே” – இத்தொடரில் ‘திண்டிறல்’ என்னும் சொல்லிற்கு
(A) கொடுமையான
(B) கடுமையான
(C) எடுப்பான
(D) உறுதியான
விடை : (D)
3. துரைமாணிக்கம் என்ற இயற்பெயரைக் கொண்டவர்
(A) மீரா
(Β) முடியரசன்
(C) கண்ணதாசன்
(D) பெருஞ்சித்திரனார்
விடை : (D)
தமிழகத்தில் 20 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!
4. பாவை நூல்களில் காலத்தால் முற்பட்டதாகக் கருதப்படும் நூல் எது?
(A) தைப்பாவை
(B) திருப்பாவை
(C) திருவெம்பாவை
(D) காவியப்பாவை
விடை : (B)
5. “எறும்பும் தன்கையில் எண் சாண்” – எனப் பாடியவர்
(A) கபிலர்
(B) ஒட்டக்கூத்தர்
(C) ஒளவையார்
(D) புகழேந்தி
விடை : (C)
























