TNPSC தேர்வில் தேர்ச்சி பெறுவது உங்கள் கனவா? உடனே இதை பாருங்க!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது குரூப் 1, 2 ,4 என பல்வேறு தேர்வுகள் மூலம் அதன் காலிப்பணியிடங்கள் நிரப்பி வருகிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு முறையான பயிற்சி என்பது மிகவும் முக்கியம். எனவே தேர்வர்களுக்கு உதவும் வகையில் பொதுத்தமிழ் பாடத்தில் முந்தைய ஆண்டில் கேட்கப்பட்ட கேள்வி கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.இது தேர்வர்களுக்கு தேர்வில் தேர்ச்சி பெற பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
1. உலகத் தமிழரிடையே தமிழுணர்வை உருவாக்கப் பாடுபட்ட பெருஞ்சித்திரனாரின் இதழ் பெயரைத் தேர்ந்தெடு.
(A) இந்தியா
(B) குயில்
(C) தமிழ்ச்சிட்டு
(D) மணிக்கொடி
விடை : (C)
2. மேதையில் சிறந்ததன்று என முதுமொழிக்காஞ்சி குறிப்பிடுவது
(A) கற்றது மறவாமை
(B) ஒழுக்கம் உடைமை
(C) கண்ணஞ்சப் படுதல்
(D) வாய்மை உடைமை
விடை : (A)
3. ஈற்றயலடி ‘சிந்தடி’ பெற்று வரும் பா வகை
(A) நேரிசைச் சிந்தியல் வெண்பா
(B) இன்னிசைச் சிந்தியல் வெண்பா
(C) நிலைமண்டில ஆசிரியப்பா
(D) நேரிசை ஆசிரியப்பா
விடை : (D)
TNPSC தேர்வில் தேர்ச்சி பெறுவது உங்கள் கனவா? இதை மிஸ் பண்ணாம பாருங்க!
4. ‘நல்ல’ எனும் அடைமொழியைப் பெற்ற நூல் எது?
(A) நற்றிணை
(B) குறுந்தொகை
(C) அகநானூறு
(D) ஐங்குறுநூறு
விடை : (B)
5. ‘கடலில் கரைத்த பெருங்காயம் போல’ இந்த உவமை வாக்கியம் உணர்த்தும் பொருள்
(A) பகர்தல்
(B) கலத்தல்
(C) வீணாதல்
(D) ஏமாறல்
விடை : (C)



























