போட்டி தேர்வில் கணிதத்தில் அதிக மார்க் எடுக்கணுமா? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!

0

போட்டி தேர்வில் கணிதத்தில் அதிக மார்க் எடுக்கணுமா? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கீழ் குரூப் 1 மற்றும் குரூப் 4 தேர்வுகள் நடத்துவது குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இந்த போட்டி தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கு அனைத்து பாடங்களிலும் தனி கவனம் செலுத்துவது முக்கியமான ஒன்றாகும். குறிப்பாக கணிதத்தில் பெறப்படும் மதிப்பெண்கள் தேர்ச்சி பெறுவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்துகிறது. அல்ஜீப்ரா, ஜியோமெட்ரி, ட்ரிக்னாமெட்ரி போன்ற பாடங்களின் மூலக்கூறுகளை கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். தேர்வர்களுக்கு உதவும் வகையில் முந்தைய ஆண்டுகளில் கேட்கப்பட்ட கேள்விகள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

A என்பவர் ஒரு வேலையை 20 நாட்களிலும், B என்பவர் அதே வேலையை 30 நாட்களிலும் செய்து முடிப்பார்கள். அவ்விருவரும் சேர்ந்து அவ்வேலையைச் செய்து முடிக்க எத்தனை நாட்கள் ஆகும்?

(A) 10 நாட்கள்

(B) 12 நாட்கள்

(C) 11 நாட்கள்

(D) 20 நாட்கள்

விடை – B

ஒரு தொகையின் 12% என்பது ₹1080 எனில் அத்தொகையைக் காண்க.

(A) ₹9000

(C) ₹7000

(B) ₹8000

(D) ₹6000

விடை – A

பூமியின் 2250 பாகத்தில் 5 பாகம் சல்பர் உள்ளது. எனில் பூமியில் எத்தனை சதவீதம் சல்பர் உள்ளது?

(A) 11/50

(B) 2/9

(C) 1/45

(D) 2/45

விடை – B

ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இருவரும் சேர்ந்து ஒரு வேலையை செய்கிறார்கள். ஆண் ஒரு வேலையை 4 நாட்களில் செய்து முடிப்பார். ஒரு பெண் அதே வேலையை 12 நாட்களில் செய்து முடிப்பார். அவ்வேலையை இருவரும் சேர்ந்து எத்தனை நாட்களில் முடிப்பார்கள்?

(A) 6 நாட்கள்

(C) 4 நாட்கள்

(B) 5 நாட்கள்

(D) 3 நாட்கள்

விடை – D

ரூ. 414-க்கு விற்கப்படும் ஒரு மேசையின் லாபம் 15% எனில் அதன் வாங்கிய விலை என்ன?

(A) ரூ. 400

(B) ரூ. 314

(C) ரூ. 326

(D) ரூ. 360

விடை – D

ஒரு நாற்காலியின் விலை ரூபாய் 2100 யிலிருந்து ரூபாய் 2520 ஆக அதிகரித்துள்ளது எனில் அதிகரித்த விலை சதவீதத்தைக் காண்க.

(A) 15%

(B) 20%

(C) 10%

(D) 25%

விடை – B

ஒரு எண்ணின் 300% ஆனது 120 எனில், அவ்வெண்ணின் 60% காண்க.

(A) 12

(B) 24

(C) 36

(D) 48

விடை – B

அசல் ரூ. 5,000 க்கு 10% வட்டி வீதத்தில் 5 ஆண்டுகளுக்கு தனி வட்டி என்ன?

(A) 3500

(B) 5000

(C) 2500

(D) 2000

விடை : (C)

₹1,000க்கு 10% வட்டி வீதம் 2 ஆண்டுகளுக்கு தனி வட்டி

(A) ₹ 1,000

(B) ₹ 200

(C) ₹100

(D) ₹2,000

விடை : (B)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!