TNPSC தமிழ்வழி 20 சதவீத இடஒதுக்கீடு – உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!!

4
TNPSC தமிழ்வழி 20 சதவீத இடஒதுக்கீடு - உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!!
TNPSC தமிழ்வழி 20 சதவீத இடஒதுக்கீடு - உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!!
TNPSC தமிழ்வழி 20 சதவீத இடஒதுக்கீடு – உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!!

தமிழ்நாடு அரசு தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களில் பள்ளி, கல்லூரி மற்றும் தொழில்துறை படிப்புகள் வரை தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு மட்டுமே 20 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்வழி இடஒதுக்கீடு:

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC), சீருடைப் பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) என பல்வேறு அரசுத்துறை பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு (PSTM) இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில் பள்ளி படிப்பு மட்டும் தமிழ் வழியில் பயின்று கல்லூரி படிப்பில் ஆங்கிலம் வழியில் பயின்றவர்களுக்கும் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அதில் பெரும்பாலும் தொலைதூர கல்வி மூலமாக பயின்றவர்கள் உள்ளனர். எனவே டிஎன்பிஎஸ்சி இடஒதுக்கீடு மூலமாக சலுகை அடிப்படையில் தேர்வானவர்களுக்கு பணிநியமனம் வழங்க தடை விதிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.

9, 11ம் வகுப்பு இறுதித்தேர்வுகள் திருத்தப்பட்ட அட்டவணை – கல்வித்துறை வெளியீடு!!

அந்த வழக்கு விசாரணையில் பள்ளி, கல்லூரி அல்லது தொழில் துறை படிப்பு என அனைத்திலும் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு மட்டுமே சலுகை வழங்கப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தமிழ் வழி படித்ததற்கான போலி சான்றிதழ் வழங்கப்படுகிறதா? என ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை நடத்தி 3 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

4 COMMENTS

  1. 1-12 வரை தமிழ் வழியில் படித்து, B.A வில் ஆங்கில இலக்கியத்தை எடுத்து படித்தவர்கள் என்ன செய்வார்கள்…
    அதிலும் தமிழையே மொழிபாடமாக எடுத்து இரண்டாண்டுகள் தேர்வு எழுதியுள்ளனர்…ஆங்கிலத்தை எந்த கல்லூரியில் தமிழில் கற்பிக்கின்றனர்…
    இல்லை ஆங்கில இலக்கியம் படித்தால் தமிழ்வழி இட ஒதுக்கீடு கிடையாது என TNPSC நெறிமுறைகளில் எங்கேனும் முன்பு கூறப்பட்டிருந்ததா…
    அதற்கு பின் படித்த B.Ed லிலும் தமிழ் வழியிலேயே படிக்கப்பட்டது…
    அரசு கல்லூரிகளில் மட்டுமே தமிழ்வழியில் இதுநாள் வரை தமிழில் கற்பிக்கப்பட்டு வந்தது…
    தமிழ்வழியில் படித்திருக்கவேண்டுமெனில் அத்தனை மாணவர்களும் அரசு கல்லூரியில் படிக்க போதிய இடங்களை அரசு ஏற்படுத்தியிருந்ததா…
    அவ்வாரில்லாமல் எவ்வாறு தமிழ்வழி கல்வி கல்லூரியில் அனைவருக்கும் சாத்தியமாகும்…
    பள்ளிக்கல்வியை தமிழ்வழியில் முடித்து, பொறியியலை ஆங்கிலத்தில் படித்த மாணவர்களின் நிலை…
    இப்போதுதான் பொறியியலும் தமிழ்வழியில் கற்பிக்கப்படும் என்ற அறிவிப்பே வெளியாகியிருக்கிறது…

    • பன்னிரண்டாம் வகுப்பு வரை தமிழ் வழி மூலம் படித்தவர்கள் அனைவருக்கும் இந்த சலுகையை வழங்கலாம் என்று சொல்வதே சரியாக இருக்கும்

  2. Yes mam ur correct

    இதுல distance education காசு குடுத்தா லும் 3year ஆகும் பொது நல வழக்கு பதிவு Panna முடியுமா……..
    Mam…….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!