9, 11ம் வகுப்பு இறுதித்தேர்வுகள் திருத்தப்பட்ட அட்டவணை – கல்வித்துறை வெளியீடு!!

0
9, 11ம் வகுப்பு இறுதித்தேர்வுகள் திருத்தப்பட்ட அட்டவணை - கல்வித்துறை வெளியீடு!!
9, 11ம் வகுப்பு இறுதித்தேர்வுகள் திருத்தப்பட்ட அட்டவணை - கல்வித்துறை வெளியீடு!!
9, 11ம் வகுப்பு இறுதித்தேர்வுகள் திருத்தப்பட்ட அட்டவணை – கல்வித்துறை வெளியீடு!!

ஹரியானா மாநிலத்தில் 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கான இறுதித் தேர்வுகளின் தேதிகள் மாற்றப்பட்டுள்ளது. அதற்கான திருத்தப்பட்ட தேர்வு அட்டவணையை மாநில பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

பள்ளிகள் திறப்பு:

ஹரியானா மாநிலத்தில் ஆறு மாத கொரோனா ஊரங்கிற்கு பின்னர் பள்ளிகள் கடந்த செப்டம்பர் மாதம் 9 முதல் 12ம் வகுப்பு வரை திறக்கப்பட்டது. தொடர்ந்து தொற்றின் தாக்கம் அதிகமான காரணத்தால் பள்ளிகள் நவம்பர் மாதம் முதல் மூடப்பட்டன. பின்னர் உயர் வகுப்புகளுக்கு மட்டும் டிசம்பர் மாத இடையில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து 6 முதல் 8 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது.

பள்ளி, கல்லூரிகளுக்கு மார்ச் 31 வரை விடுமுறை – மாநில அரசு உத்தரவு!!

தேர்வுகள்:

ஹரியானா மாநிலத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 1ம் தேதி முதல் தேர்வுகள் தொடங்கப்பட்டது. 10ம் வகுப்புக்கு மார்ச் 9ம் தேதியும், 12ம் வகுப்புக்கு மார்ச் 22ம் தேதியும் தேர்வுகள் முடிவடைந்தது. இந்நிலையில் 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு இறுதி தேர்வுகள் மார்ச் 26ம் தேதியில் இருந்து ஏப்ரல் 23ம் தேதி வரை நடக்க இருந்தது.

TN Job “FB  Group” Join Now

திருத்தப்பட்ட தேர்வுகள்:

தற்போது கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருவதால் மாணவர்களின் நலன் கருதி 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகளை `மார்ச் 30 ம் தேதியில் இருந்து ஏப்ரல் 17ம் தேதி வரை மாற்றியமைத்துள்ளதாக ஹரியானா மாநில பள்ளிக்கல்வித்துறை தலைவர் டாக்டர் ஜக்பீர் சிங் அறிவித்துள்ளார். மேலும் தேர்வுகள் காலை 8:30 மணி முதல் 11 மணி வரை நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!