போட்டி தேர்வு எழுதுபவர்கள் கவனத்திற்கு – ஈஸியா பாஸ் ஆக இதை கட்டாயம் தெரிஞ்சுக்கணும்!

0

போட்டி தேர்வு எழுதுபவர்கள் கவனத்திற்கு – ஈஸியா பாஸ் ஆக இதை கட்டாயம் தெரிஞ்சுக்கணும்!

தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் ஆனது பல்வேறு போட்டித் தேர்வு நடத்தி வருகிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெறும் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். கணிதத்தில் அதிக மதிப்பெண்கள் பெறுவது தேர்ச்சி பெறும் வாய்ப்பு அதிகப்படுத்துகிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் நடத்தப்படும் தேர்வில் INM பாட பிரிவில் முந்தைய ஆண்டில் கேட்கப்பட்ட கேள்விகளின் தொகுப்பு கீழே வழங்கப்பட்டுள்ளது.

1. இரவிந்திரநாத் தாகூர் எழுதிய ஜன -கன-மன பாடல் முதன் முறையாக, கல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் பாடப்பட்ட நாள்

(A) 24 ஜனவரி 1950

(B) 27 டிசம்பர் 1911

(C) 27 டிசம்பர் 1948

(D) 26 ஜனவரி 1930

விடை: (B)

2.ஒரு பொதுக் கூட்டத்தில் வல்லபாய் பட்டேலை ‘சர்தார்’ என்று அழைத்தவர் யார்?

(A) ஜவஹர்லால் நேரு

(B) ராஜாஜி

(C) சுபாஷ் சந்திர போஸ்

(D) மகாத்மா காந்தி

விடை: (D)

3.முதல் முறை நேரு இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு

(A) 1932

(B) 1931

(C) 1929

(D) 1935

விடை: (C)

4.கீழ்காண்பவைகளுள் இந்தியாவின் முதல் பிராந்திய செய்தித்தாள் எது?

(A) சம்பத் கெளமுதி

(C) தியங் இந்தியா

(B) தி பெங்காலி

(D) தி பீப்பில் பிரண்ட்

விடை: (A)

5.மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

(A) 2 பிப்ரவரி 2006

(B) 2 பிப்ரவரி 2007

(C) 2 பிப்ரவரி 2008

(D) 2 பிப்ரவரி 2009

விடை: (A)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!