TNPSC குரூப் 4 தேர்விற்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – பாடத்திட்டம் & முழு விபரம் இதோ!

0
TNPSC குரூப் 4 தேர்விற்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு - பாடத்திட்டம் & முழு விபரம் இதோ!
TNPSC குரூப் 4 தேர்விற்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு - பாடத்திட்டம் & முழு விபரம் இதோ!
TNPSC குரூப் 4 தேர்விற்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – பாடத்திட்டம் & முழு விபரம் இதோ!

குரூப் 4 தகுதி தேர்வு ஜூலை 2 நடக்க இருக்கும் நிலையில் இந்தாண்டு பல லட்சக்கணக்கானோர் குரூப் 4 தேர்வினை எழுத்தவுள்ளனர். தேர்விற்கு எந்தெந்த பாடத்திட்டங்களில் இருந்து கேள்விகள் இடம்பெறும் என்பதற்கான முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

குரூப் 4 தேர்வு:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை தகுதித் தேர்வின் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்களை தேர்ந்தெடுத்து நிரப்பி வருகின்றன. அதன்படி இந்தாண்டு குரூப் 2 தேர்வு மே 21 ஆம் தேதியும், குரூப் 4 தகுதி தேர்வு ஜூலை 2 ஆம் தேதியும் நடைபெற இருக்கிறது. குரூப் -4 தேர்வின் மூலமாக 7,382 காலிப் பணியிடங்கள் நிரப்பபடவுள்ளன. இதில் 81 காலிப் பணியிடங்கள் ஸ்போர்ட்ஸ் கோட்டா மூலம் நிரப்பப்படவுள்ளன. பொது அறிவில் இருந்து 75 வினாக்களும், திறனறிவு மற்றும் புத்திகூர்மை பகுதிகளில் இருந்து 25 வினாக்களும், பொதுத் தமிழ் பகுதியில் இருந்து 100 வினாக்களும் கேட்கப்படும்.

PM கிசான் திட்டத்தில் சேர விவசாயிகளுக்கு ஒரு புதிய வாய்ப்பு – வேளாண்துறை அறிவிப்பு!

மொத்தமாக 200 மதிப்பெண்ணுக்கு குரூப் 4 தேர்வு நடைபெறும். தேர்வு எழுதுவதற்கு மொத்தமாக 3 மணி நேரம் வழங்கப்படுகிறது. தற்போது எந்தெந்த பாடத்திட்டங்களில் இருந்து குரூப் 4 தேர்விற்கு கேள்விகள் கேட்கப்படும் என்பது குறித்தான அனைத்து விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அறிவியல் பாடத்திட்டத்தில் இருந்து இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் ஆகிய பகுதிகளில் இருந்து வினாக்களும், நடப்பு நிகழ்வுகள் பாடத்திட்டத்தில் இருந்து வரலாறு, அரசியல் அறிவியல், புவியியல், பொருளாதாரம், அறிவியல் ஆகிய பகுதிகளில் இருந்து வினாக்களும், புவியியல் பாடத்திட்டத்தில் இருந்து புவி மற்றும் பிரபஞ்சம், சூரியக் குடும்பம், பருவகாற்றுகள், வானிலை, நீர் ஆதாரங்கள், மண், கனிம வளங்கள், காடுகள், வன உயிரினங்கள் ஆகிய பகுதிகளில் இருந்து வினாக்களும் கேட்கப்படும்.

மேலும், வரலாறு பாடத்திட்டத்தில் இருந்து சிந்து சமவெளி நாகரிகம், குப்தர்கள், டில்லி சுல்தான், முகலாயர்கள், மராத்தியர்கள், விஜய நகர மற்றும் பாமினி அரசுகள், தென்னிந்திய வரலாறு, கலாச்சாரம் மற்றும் பண்பாடு ஆகிய பகுதிகளில் இருந்து வினாக்களும், இந்திய அரசியல் பாடத்திட்டத்தில் இருந்து அரசியலமைப்பு, முகவுரை, அரசியலமைப்பின் சிறப்பம்சங்கள், குடியுரிமை, கடமைகள் மற்றும் உரிமைகள், ஒன்றிய மற்றும் மாநில நிர்வாகம், பாராளுமன்றம், பஞ்சாயத்து ராஜ் ஆகிய பகுதிகளில் இருந்து வினாக்களும், பாடத்திட்டத்தில் இருந்து ஆகிய பகுதிகளில் இருந்து வினாக்களும், பொருளாதாரம் பாடத்திட்டத்தில் இருந்து ஐந்தாண்டு திட்டங்கள், நிலச்சீர்திருத்தம், வேளான் மற்றும் வணிக வளர்ச்சி ஆகிய பகுதிகளில் இருந்து வினாக்களும், இந்திய தேசிய இயக்கம் பாடத்திட்டத்தில் இருந்து தேசிய எழுச்சி, விடுதலைப் போராட்டத்தில் காந்தி, நேரு, தாகூர், ராஜாஜி, வ.உ.சி, பெரியார், பாரதியார் மற்றும் பல தலைவர்களின் பங்கு ஆகிய பகுதிகளில் இருந்து வினாக்கள் கேட்கப்படும்,

Exams Daily Mobile App Download

மேலும், திறனறி வினாக்கள் பாடத்திட்டத்தில் இருந்து தர்க்க அறிவு (Reasoning) மற்றும் கணிதத்தைக் கொண்டது. இதில் சுருக்குதல் (Simplification), எண்ணியல் (Number System), கூட்டுத்தொடர் மற்றும் பெருக்குத்தொடர் (Arithmetic Progression and Geometric Progression), சராசரி (Average), சதவீதம் (Percentage), விகிதம் மற்றும் விகித சமம் (Ratio and Proportion), மீ.பெ.வ (Highest Common Factor), மீ.சி.ம (Least Common Multiple), தனிவட்டி (Simple Interest), கூட்டுவட்டி (Compound Interest), அளவியல் பாடங்களில் பரப்பளவு (Area) மற்றும் கன அளவு (Volume), வேலை மற்றும் நேரம் (Time and Work), வேலை மற்றும் தூரம் (Time and Distance), வயது கணக்குகள் (Ages), இலாபம் மற்றும் நட்டம் (Profit and Loss), வடிவியல் (Geometry), இயற்கணிதம் (Algebra) ஆகிய பகுதிகளில் இருந்து வினாக்கள் கேட்கப்படும். குரூப் 4 தேர்விற்கு விண்ணப்பித்துள்ளவர்கள் https://www.tnpsc.gov.in/static_pdf/syllabus/G4_Scheme_Revised_27012022.pdf இந்த முகவரிக்கு சென்று பாடத்திட்டங்களை அறிந்துகொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!