இனி கண்ணம்மாவின் பாரதியாக களமிறங்கும் ‘பாக்கியலட்சுமி’ ஆர்யன் – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் ஷாக்!

0
இனி கண்ணம்மாவின் பாரதியாக களமிறங்கும் 'பாக்கியலட்சுமி' ஆர்யன் - ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் ஷாக்!
இனி கண்ணம்மாவின் பாரதியாக களமிறங்கும் 'பாக்கியலட்சுமி' ஆர்யன் - ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் ஷாக்!
இனி கண்ணம்மாவின் பாரதியாக களமிறங்கும் ‘பாக்கியலட்சுமி’ ஆர்யன் – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், தற்போது கதைக்களம் அடுத்தகட்டத்துக்கு சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் பாரதியாக நடித்து வரும் அருண் தற்போது சீரியலில் இருந்து விலக இருப்பதாகவும் அவருக்கு பதிலாக நடிகர் ஆர்யன் பாரதியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

பாரதி கண்ணம்மா:

பாரதி கண்ணம்மா சீரியலில், தற்போது பாரதி கண்ணம்மாவின் குடும்ப கதையை காட்டாமல் மருத்துவமனை ஆப்ரேசன் என சமூக கருத்துக்களை காட்டி வருகின்றனர். இன்னொரு பக்கம் வில்லி வெண்பாவை கட்டுப்படுத்த அவருடைய அம்மா ஷர்மிளா வந்திருக்கிறார். அவர் வெண்பாவிற்கு மாப்பிள்ளை பார்க்க வேண்டும் என ஆவலுடன் இருக்கிறார். இப்படி கதை சென்று கொண்டிருக்க சௌந்தர்யாவிற்கு லக்ஷ்மிக்கு உண்மை தெரிந்து இருக்குமோ என்ற சந்தேகம் இருக்கிறது.

Exams Daily Mobile App Download

இப்படி பல திருப்பங்களுடன் கதை சென்று கொண்டிருக்கிறது. ஆனாலும் முன்னர் இருந்தது போல பாரதி கண்ணம்மாவிற்கு TRP ரேட்டிங் இல்லை. அதற்கு முக்கிய கதாபாத்திரங்களின் மாற்றமே காரணமாக இருக்கிறது. முதலில் அகில் கதாபாத்திரத்தில் நடித்த அகிலன், அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்த கண்மணி, கண்ணம்மாவாக நடித்த ரோஷினி ஆகியோர் சீரியலில் இருந்து விலகி இருக்கின்றனர். அவர்களுக்கு பதிலாக வேறு நடிகர் நடிகைகள் நடித்து வருகின்றனர்.

கோபி யாரிடம் பேசுகிறார் என பார்க்க பாக்கியா செய்த காரியம் – “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்து வருபவை!

இந்நிலையில் தற்போது டாக்டர் பாரதியாக நடித்து வரும் அருண் பிரசாத் சீரியலில் இருந்து விலக இருப்பதாக சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியானது. ஆனால் அது குறித்து அருண் எந்த விளக்கமும் தற்போது வரை கொடுக்கவில்லை. ஆனால் தற்போது பாரதியாக பாக்கியலட்சுமி சீரியலில் செழியனாக நடித்த ஆர்யன் களமிறங்க இருப்பதாக ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது. ஆனால் இது வெறும் எடிட் செய்யப்பட்ட ப்ரோமோ தான் என்பதால் ரசிகர்கள் நிம்மதியாக இருக்கின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!