66 காலியிடங்கள், 2 லட்சம் பேர் போட்டி – நாளை TNPSC குரூப் 1 தேர்வு!!

0
66 காலியிடங்கள், 2 லட்சம் பேர் போட்டி - நாளை TNPSC குரூப் 1 தேர்வு!!
66 காலியிடங்கள், 2 லட்சம் பேர் போட்டி - நாளை TNPSC குரூப் 1 தேர்வு!!
66 காலியிடங்கள், 2 லட்சம் பேர் போட்டி – நாளை நடைபெறும் TNPSC குரூப் 1 தேர்வு!!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பாக துணை ஆட்சியர் மற்றும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பதவிக்கான குரூப் 1 முதல்நிலை தேர்வு தமிழகம் முழுவதும் நாளை நடைபெற உள்ளது. 66 காலியிடங்களுக்கு நடத்தப்படும் தேர்வில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுத உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வுகள்:

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 முதல்நிலை தேர்வு ஏற்கனவே ஏப்ரல் 5-ஆம் தேதி நடைபெற இருந்தது. கொரோனா காரணமாக தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டு தற்போது ஜனவரி 3-ஆம் தேதி நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தேர்வு நடைபெறும். தேர்வர்கள் காலை 9.15 மணிக்கு தேர்வு மையத்திற்கு வர வேண்டும்.

6 முதல் 10 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – பியூசி வகுப்புகள் தொடக்கம்!!

தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி தேர்வர்கள் தேர்வு எழுதும் பொது கருப்பு மையில் தேர்வு எழுத வேண்டும். மேலும் ஓஎம்ஆர் விடைத்தாளில் புதிதாக விடை அளிக்காத கேள்விகளை குறிக்க ‘இ’ பிரிவு, ஆதார் எண் கட்டாயம் போன்ற புதிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

ஜனவரி 7 முதல் யோகா, இயற்கை மருத்துவ கலந்தாய்வு – இந்திய மருத்துவ துறை அறிவிப்பு!!

முதல்நிலை தேர்வில் வெற்றி பெறுவோருக்கு மெயின் தேர்வில் அனுமதி வழங்கப்படும். காலிப்பணியிடங்கள் 66 இருப்பதால் ஒரு இடத்திற்கு 50 பேர் என்கிற கணக்கில் 3300 பேர் மெயின் தேர்வுக்கு தேர்வு செய்யப்படுவார்கள். மெயின் தேர்வு சென்னையில் நடைபெறும். அதில் வெற்றி பெறுவோருக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்படும். இறுதியாக மெயின் தேர்வு, நேர்முக தேர்வு, இடஒதுக்கீடு ஆகிய மதிப்பெண்களின் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படும்.

Velaivaippu Seithigal 2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!