TNPSC Group 4 VAO தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் இதோ!

1
TNPSC Group 4 VAO தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு - விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் இதோ!
TNPSC Group 4 VAO தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு - விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் இதோ!
TNPSC Group 4 VAO தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் இதோ!

TNPSC குரூப் 4 தேர்வு 7301 காலிப்பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இந்நிலையில் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், எந்த இணையதளத்தில் எப்படி விண்ணப்பிக்கலாம் என்பதை இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

முழு விவரம்:

தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் பணியாளர்கள், அலுவலர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலமாக தேர்வு செய்யப்படுகின்றனர். இதற்காக டிஎன்பிஎஸ்சி அவ்வப்போது போட்டித் தேர்வுகளை நடத்தி, தகுதியான நபர்களை தேர்வு செய்து அரசு துறைகளுக்கு வழங்குகிறது. ஓராண்டில் எந்தெந்த அரசு பணிகளுக்கான தேர்வு அறிவிக்கை எப்போது வெளியிடப்படும், எப்போது தேர்வு நடக்கும், தேர்வு முடிவுகள், நேர்காணல் எப்போது நடைபெறும் என்ற விவரங்கள் அடங்கிய வருடாந்திர தேர்வுகால அட்டவணையை (Annual Planner) டிஎன்பிஎஸ்சி ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கோடை விடுமுறை கட்?

இந்நிலையில் இந்த ஆண்டு குரூப் 2, 2A மற்றும் குரூப் 4 உள்ளிட்ட 32 வகையான தேர்வுகளை நடத்துவதாக TNPSC அறிவித்துள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு மொத்தம் 5831 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வுக்கான விண்ணப்ப செயல்முறைகள் மார்ச் 23ம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், மே 21ம் தேதி நடத்தப்படும் என்றும் இதன் முடிவுகள் ஜூன் மாதம் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல சுமார் 7000 க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு அறிவிப்புகள் கடந்த வாரம் வெளியான நிலையில், ஏப்ரல் 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது.

1. முதலில் விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in / www.tnpscexams.in ஆகிய ஆகிய இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

2. எந்தவொரு பதவிக்கும் விண்ணப்பிக்கும் முன்பு ஆதார் எண் மூலம் ஒரு முறைப் பதிவு எனப்படும் நிரந்தரப் பதிவு (OTR) மற்றும் தன்விவரப் பக்கம் (Dashboard) ஆகியன கட்டாயமாகும். விண்ணப்பதாரர்கள் நிரந்தர பதிவு மூலம் பதிவுக் கட்டணமாக ரூ.150/- ஐ செலுத்தி, பதிவு செய்து கொள்ள வேண்டும்.

3. ஒரு முறைப் பதிவு, பதிவு செய்த நாள் முதல் ஐந்தாண்டுகள் வரை நடைமுறையிலிருக்கும், தங்களுக்குரிய ஒரு முறைப் பதிவு கணக்கு (One Time Registration ID) மற்றும் கடவுச்சொல் மூலமாக மட்டுமே விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

3. ஒரு முறைப் பதிவில் பதிவேற்றம் செய்ய, விண்ணப்பதாரர்கள் தங்களது புகைப்படம், கையொப்பம் ஆகியவற்றை CD;DVD/Pen drive போன்ற ஏதேனும் பதிவு செய்து தயாராக வைத்திருக்க வேண்டும்.

4. ஒரு விண்ணப்பதாரர் ஒன்றுக்கும் மேற்பட்ட ஒருமுறைப் பதிவுக் கணக்கை (One Time RegistrationID) உருவாக்க அனுமதி இல்லை.

5. விண்ணப்பதாரர்கள் தங்களுக்குரிய தனித்துவமான பதிவுக்கணக்கு மற்றும் கடவுச் சொல்லைப் பயன்படுத்தி ஏற்கனவே பதிவிட்ட தங்களது விவரங்களை பார்வையிடவும், புதுப்பிக்கவும் செய்யலாம். தங்களது ஒரு முறைப்பதிவு கடவுச் சொல்லினை வேறு நபரிடமோ (அ) முகவர்களிடமோ பகிர்ந்து கொள்ள கூடாது.

6. ஒரு முறைப்பதிவு என்பது எந்தவொரு பதவிக்கான விண்ணப்பம் அல்ல. இது விண்ணப்பதாரர்களின் விவரங்களைப் பெற்று அவர்களுக்கு தன்விவரப் பக்கம் ஒன்றினை உருவாக்க மட்டுமே பயன்படும். எந்தவொரு பதவிக்கும் விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், அறிவிக்கையில் “Apply என்ற உள்ளீடு வழியே நிரந்தரப் பதிவுக்குரிய பயனாளர் குறியீடு மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றை உள்ளீடு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

7. விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பிக்க விரும்பும் பதவியின் பெயரை தேர்வு செய்ய வேண்டும். புகைப்படம், குறிப்பிட்ட ஆவணங்கள் மற்றும் கையொப்பம் இல்லாமல் அனுப்பப்படும் இணையவழி விண்ணப்பம் உரிய நடைமுறைகளுக்குப் பின்னர் நிராகரிக்கப்படும்.

8. இணையவழி விண்ணப்பத்தில் சில தளங்கள் திருத்த இயலாது. எனவே, விண்ணப்பதாரர்கள் மிகுந்த கவனத்துடன் விவரங்களை பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

9. இணையவழியில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தில், விண்ணப்பதாரர்களின் விவரங்கள் இறுதியானவையாகக் கருதப்படும். இணையவழி விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட பின்பு திருத்தம் கோரி தேர்வாணையத்தில் பெறப்படும் எந்தவொரு கோரிக்கையும் பரிசீலிக்கப்படமாட்டாது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!