TNPSC குரூப் 4 தேர்வு அதிகாரபூர்வ அறிவிப்பு 2022 – இன்று மாலை வெளியீடு! தேர்வர்கள் கவனத்திற்கு!

0
TNPSC குரூப் 4 தேர்வு அதிகாரபூர்வ அறிவிப்பு 2022 - இன்று மாலை வெளியீடு! தேர்வர்கள் கவனத்திற்கு!
TNPSC குரூப் 4 தேர்வு அதிகாரபூர்வ அறிவிப்பு 2022 – இன்று மாலை வெளியீடு! தேர்வர்கள் கவனத்திற்கு!

TNPSC மூலம் நடத்தப்படும் குரூப் 2, குரூப் 2A க்கான அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பை அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டு உள்ளது. அந்த தகவலின் படி, இன்று குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

குரூப் 4 அறிவிப்பு:

தமிழ்நாடு அரசுப் பணிகளில் காலியாக பணியிடங்களை நிரப்புவதற்கு குரூப் -1, குரூப் -2, குரூப் -4 ஆகிய வகைகளில் போட்டி தேர்வுகள் TNPSC மூலம் நடத்தப்படுகிறது. இந்த தேர்வுகளில் வெற்றி பெறுவது இளைஞர்களின் பெரும் கனவாக இருந்து வருகிறது. மேலும் குரூப் -1 பிரிவில் அரசின் உச்ச அதிகாரப் பணிகளான துணை ஆட்சியர், துணைக் காவல் கண்காணிப்பாளர் மற்றும் குரூப் -2 பிரிவில் சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், உதவி தொழிலாளர் அலுவலர், சார் பதிவாளர், லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு உதவியாளர், புலனாய்வு பிரிவு சிறப்பு உதவியாளர், குற்றப்பிரிவு சிறப்பு உதவியாளர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

TNUSRB – SI தேர்விற்கு படிப்பவரா? – உங்களுக்கு அரிய வாய்ப்பு ..!

அரசு துறைகளில் 4 ஆம் நிலை பதவிகளை நிரப்ப நடத்தப்படும் தேர்வு குரூப் 4 ஆகும். இருப்பினும் குரூப் 4 தேர்வுக்கு தான் அதிகமான போட்டிகள் நிலவி வருகிறது. ஏனென்றால் இந்த தேர்வுக்கு ஒரே ஒரு எழுத்துத் தேர்வு மட்டுமே நடைபெறும். இதில் சில ஆண்டுகளுக்கு முன் VAO பதவிகளுக்கான தேர்வும் சேர்த்தே நடத்தப்படுகிறது. இந்த குரூப் 4 தேர்வானது இளநிலை உதவியாளர் (Junior Assistant), தட்டச்சர் (Typist), சுருக்கெழுத்து தட்டச்சர் (Steno-Typist), கிராம நிர்வாக அலுவலர் (Village Administrative Officer),வரித் தண்டலர் (Bill Collector), நில அளவர் (Field Surveyor), வரைவாளர் (Draftsman) ஆகிய 7 பதவிகளுக்காக நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வுக்கு கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரைவாளர், நில அளவர், வரித்தண்டலர் ஆகிய பதவிகளுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – அமைச்சர் வெளியிட்ட உத்தரவு!

தொடர்ந்து தட்டச்சர் பதவிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி உடன் அரசு தொழில்நுட்ப தட்டச்சு தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை (மற்றும் / அல்லது) முதுநிலை தேர்ச்சி மற்றும் சுருக்கெழுத்தர் பதவிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி உடன் அரசு தொழில்நுட்ப தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து 2 தேர்விலும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை மற்றும் இந்த தேர்வு எழுத வயது வரம்பு இல்லை. இந்த நிலையில், குரூப் – 4 தேர்வு தேதி இன்று மாலை 4.30 மணிக்கு அறிவிக்கப்படும். மேலும் தேர்வாணைய தலைவர் கா. பாலசந்திரன் தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளார் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!