TNPSC Group 4 General Tamil  Quiz with Answer || Unit I   Section 1 Part B  – PDF Download…!!

0
TNPSC Group 4 General Tamil  Quiz with Answer || Unit I   Section 1 Part B  - PDF Download…!!
TNPSC Group 4 General Tamil  Quiz with Answer || Unit I   Section 1 Part B  - PDF Download…!!

TNPSC Group 4 General Tamil  Quiz with Answer || Unit I   Section 1 Part B  – PDF Download…!!

 

Part C தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டு தேர்வு 

அலகு 1- இலக்கணம் ; பகுதி 1 – எழுத்து 

பிரிவு B  – சந்திப்பிழை 

TNPSC Group 4 2025  VAO Questions:

பிரிவு B – I. சந்திப்பிழை 

ஒரு சொல்லின் விகுதியோடு மற்றொரு சொல் சேரும் போது நடைபெறும் மாற்றங்களில் ஏற்படுவது  பிழை ஆகும்.  உதாரணமாக, இலக்கண மரபுப்படி, யானை + பாகன் என்னும் இரு வார்த்தைகளை இணைக்கும் போது யானைப்பாகன் என எழுத வேண்டும். ஆனால், பலர் இச்சொற்களை யானைபாகன் என்றே எழுதுகின்றனர். இதனையே பிழை என்கின்றனர். 

அதாவது, தமிழில் க், ச், ட், த், ப், ற்  என ஆறு வல்லின எழுத்துக்கள் உள்ளன. இதில்,  க, ச, த, ப என்னும் நான்கு வல்லின எழுத்துக்கள் மிகும் இடங்களில் மிகாமலும், மிகாத  இடங்களில் மிகுந்தும் எழுதுவது சந்திப்பிழை ஆகும்.  மேலும், இது பலவகைப்படும். 

1.சந்திப்பிழை அற்ற சொற்றொடரை கண்டறிக.

  1. பிறர் தன்னைப் புகழுங்கால்  வெட்க படுதல் வேண்டும் 
  2. பிறர் தன்னை புகழுங்கால்  வெட்க படுதல் வேண்டும் 
  3. பிறர் தன்னை புகழுங்கால்  வெட்கப்  படுதல் வேண்டும் 
  4. பிறர்த்  தன்னைப் புகழுங்கால்  வெட்க படுதல் வேண்டும் 
  1. சந்திப்பிழை அற்ற சொற்றொடரை கண்டறிக.
  1. அந்தப் பையன் சொன்னச் செய்தி நல்லது 
  2. அந்தப் பையன் சொன்ன செய்தி நல்லது 
  3. அந்த பையன் சொன்ன செய்தி நல்லது 
  4. அந்த பையன் சொன்னச் செய்தி நல்லது 

3.ஈறு கெட்ட எதிர்மறை பெயரெச்சத்தின் பின் வல்லினம் ____________ .

  1. மிகாது 
  2. சில இடங்களில் வரும் 
  3. சில இடங்களில் வராது 
  4. மிகும் 

4. வன்றொடர்க்  குற்றியலுகரத்தின் பின் கல், தள் என்னும் விகுதிகள் வரும் போது வல்லினம் _______________ .

  1. மிகும் 
  2. மிகாது 
  3. சில இடங்களில் வரும்
  4. சில இடங்களில் வராது 
  1. சரியான கூற்றைத் தேர்ந்தெடு.

கூற்று 1 : “அந்த, இந்த, அங்கு, இங்கு, ஆண்டு, ஈண்டு, அப்படி, இப்படி” என்னும் சுட்டுப் பெயர்களின் பின் வல்லினம் மிகாது. 

கூற்று 2 : “எந்த, எப்படி, எங்கு” என்னும் வினாச் சொல்லின் பின் வல்லினம் மிகும்.   

  1. கூற்று 1 மட்டும் தவறு 
  2. கூற்று 2 மட்டும் தவறு 
  3. அனைத்தும் சரி 
  4. அனைத்தும் தவறு 
  1. சந்திப்பிழை அற்ற சொற்றொடரை கண்டறிக.
  1. வள்ளைப் பாட்டின் சிறப்புக் கேற்ப முழவை முழங்குகின்றன
  2. வள்ளைப் பாட்டின் சிறப்பு கேற்ப முழவை முழங்குகின்றன
  3. வள்ளை பாட்டின் சிறப்பு கேற்ப முழவை முழங்குகின்றது 
  4. வள்ளைப் பாட்டின் சிறப்புக் கேற்ப முழவை முழங்குகின்றது 
  1. என, ஆக என்னும் சொற்களுக்கு முன் வல்லினம் ______________ . 
  1.  சில இடங்களில் வரும்
  2. மிகாது
  3. மிகும்
  4. சில இடங்களில் வராது
  1. சந்திப்பிழையை நீக்குக 
  1. தண்டு கீரையைப் பறித்தேன்.
  2. தண்டுக் கீரையை பறித்தேன்.
  3. தண்டுக் கீரையைப் பறித்தேன்.
  4. தண்டு கீரையை பறித்தேன்.
  1. சரியான கூற்றை தேர்ந்தெடு: 

கூற்று 1 : சோலைக்கு + சென்றான் = சோலைக்கு சென்றான் 

கூற்று 2 : புலவர்க்கு + கொடுத்தான் = புலவர்க்குக் கொடுத்தான் 

  1. அனைத்தும் சரி 
  2. கூற்று 1 மட்டும் தவறு 
  3. அனைத்தும் தவறு 
  4. கூற்று 2 மட்டும் தவறு 
  1. ______________ வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகையில் வல்லினம் மிகும்.
  1. நான்காம் 
  2. ஐந்தாம் 
  3. இரண்டாம் 
  4. ஏழாம் 

மேலும், மேலே உள்ள கேள்விகளுக்கான விடைகளை அறிய கீழே உள்ள PDF-ஐ பார்வையிடவும். 

Download PDF  

 

 Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!