TNPSC Group 4 Exam 2026: தகுதிகள் மற்றும் தேர்வு முறை முழு விவரங்கள்

0

TNPSC Group 4 Exam 2026: முழுமையான வழிகாட்டி

தமிழ்நாட்டில் உள்ள பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் அரசு வேலைக் கனவை nனவாக்கும் மிக முக்கியமான தேர்வு TNPSC Group 4 ஆகும். நடப்பு 2026-ஆம் ஆண்டிலும் இத்தேர்விற்கான எதிர்பார்ப்பு மாணவர்களிடையே மிக அதிகமாக உள்ளது. கிராம நிர்வாக அலுவலர் (VAO), இளநிலை உதவியாளர் (Junior Assistant), தட்டச்சர் (Typist) போன்ற பல்வேறு பதவிகளுக்கு இத்தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பு (Eligibility & Age Limit)

  • கல்வித் தகுதி:
    இத்தேர்வை எழுத ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 10-ஆம் வகுப்பு (SSLC) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். (உயர்கல்வி படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்).
  • வயது வரம்பு:
    குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள் பூர்த்தியாகி இருக்க வேண்டும். பொதுப் பிரிவினருக்கு அதிகபட்ச வயது 32 வருடங்கள் ஆகும். (BC, MBC, SC, ST போன்ற பிரிவினருக்கு தமிழக அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு).

தேர்வு முறை (Exam Pattern)

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு என்பது நேர்காணல் இல்லாத (Non-Interview), ஒரே ஒரு எழுத்துத் தேர்வை மட்டுமே கொண்டதாகும்.
  • மொத்த கேள்விகள்:
    200 கொள்குறி வகை வினாக்கள் (MCQs).
  • மொத்த மதிப்பெண்கள்:
    300 மதிப்பெண்கள் (3 மணி நேரம்).
  • பகுதி அ (Part A):
    கட்டாயத் தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு (100 கேள்விகள் – 150 மதிப்பெண்கள்). இதில் குறைந்தபட்சம் 40% மதிப்பெண் எடுப்பது கட்டாயமாகும்.
  • பகுதி ஆ (Part B):
    பொது அறிவு மற்றும் திறனாய்வுத் தேர்வு (General Studies & Aptitude – 100 கேள்விகள் – 150 மதிப்பெண்கள்).
                     Direct Link (Official Website):
                   TNPSC Official Website

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!