TNPSC குரூப் 1 தேர்வு அறிவிப்பு சற்றுமுன் வெளியீடு – 70 காலிப்பணியிடங்கள் || உடனே விண்ணப்பிக்கவும்
TNPSC காலிப்பணியிடங்கள்:
தமிழ்நாடு அரசு பணி தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி Group-I பணிக்கென 70 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Deputy Collector – 28 பணியிடங்கள்
Deputy Superintendent of Police – 7 பணியிடங்கள்
Assistant Commissioner – 19 பணியிடங்கள்
Assistant Director of Rural Development – 7 பணியிடங்கள்
District Employment Officer – 3 பணியிடங்கள்
Assistant Commissioner of Labour – 6 பணியிடங்கள்
TNPSC கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 21 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
TNPSC ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு TNPSC -ன் நிபந்தனைகளின்படி ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, உடற்தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணல் மற்றும் Counselling மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 30.04.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


























