TNPSC குரூப் 4 தேர்வு எழுத போறீங்களா?? நீங்க இதை கட்டாயம் தெரிஞ்சுக்கணும்!!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது பல்வேறு போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது.இத்தேர்வில் தேர்வாகும் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுகிறார்கள். குரூப் 1 தேர்வில் General Studies பாடத்தில் தேர்ச்சி பெறுவது சற்று கடுமையாக உள்ளது.எனவே தேர்வர்களுக்கு உதவும் வகையில் முந்தைய ஆண்டு வினாக்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
1. விஞ்ஞான முறைகளை நிறுவுவதில் வழிகாட்டி மாணவர் சங்கிலியை காலவரிசைப்படி தேர்ந்தெடுக்கவும்
(A) அரிஸ்டாட்டில் அலெக்சாண்டர் சாக்ரடீஸ் பிளேட்டோ
(B) பிளேட்டோ சாக்ரடீஸ் – அரிஸ்டாட்டில் அலெக்சாண்டர்
(C) சாக்ரடீஸ் – பிளேட்டோ – அரிஸ்டாட்டில் அலெக்சாண்டர்
(D) அலெக்சாண்டர் – அரிஸ்டாட்டில் சாக்ரடீஸ் பிளேட்டோ
(E) விடை தெரியவில்லை
விடை: (C)
2. நெய்வேலி லிக்னைட் கார்பரேஷன் நிறுவனம் இந்திய அரசால் எப்போது நிறுவப்பட்டது?
(A) 1956
(B) 1972
(C) 1980
(D) 1959
(E) விடை தெரியவில்லை
விடை: (A)
3. நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி” என்ற பழமொழியில் ‘இரண்டு’ எதனைக் குறிக்கின்றது?
(A) பழமொழி
(B) திருக்குறள்
(C) நாலடியார்
(D) ஆத்திச்சூடி
(E) விடை தெரியவில்லை
விடை: (B)
4.பின்வரும் பல்கலைக்கழகங்களை அவை நிறுவப்பட்ட ஆண்டின் காலவரிசைப்படி ஒழுங்கமைக்கவும்:
(1) மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்
(2) பாரதிதாசன் பல்கலைக்கழகம்
(3) திருவள்ளுவர் பல்கலைக்கழகம்
(4) பெரியார் பல்கலைக்கழகம்
(A) (2), (4), (1), (3)
(B) (2), (1), (4), (3)
(C) (1), (2), (4), (3)
(D) (1), (3), (4), (2)
(E) விடை தெரியவில்லை
விடை: (B)
5. எதனை ‘பனையளவு நன்றியாகக் கொள்வர்’ என வள்ளுவர் குறிப்பிடுகிறார்?
(A) மூங்கில் அளவு நன்றி
(B) தினை அளவு நன்றி
(C) கடல் அளவு நன்றி
(D) மலை அளவு நன்றி
(E) விடை தெரியவில்லை
விடை: (B)



























