TNPSC தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவரா நீங்கள்..? அப்போ கண்டிப்பா இந்த குரூப் பற்றி தெரிஞ்சுக்கோங்க.!!

0
TNPSC ?????????? ??????? ?????????????? ???????..? ????? ????????? ???? ?????? ????? ???????????????.!!
TNPSC தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவரா நீங்கள்..? அப்போ கண்டிப்பா இந்த குரூப் பற்றி தெரிஞ்சுக்கோங்க.!!

TNPSC தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவரா நீங்கள்..? அப்போ கண்டிப்பா இந்த குரூப் பற்றி தெரிஞ்சுக்கோங்க.!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) என்பது மாநில அரசுத் துறைகளில் பல்வேறு பதவிகளுக்கு ஆட்சேர்ப்புக்கான தேர்வுகளை நடத்தும் ஒரு அமைப்பாகும். இந்த அமைப்பானது ஆண்டுதோறும் தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த TNPSC தேர்வுகள் குறித்து பலருக்கு தெரிந்திருந்தாலும், அதில் எத்தனை குரூப்புகள் உள்ளன, அவற்றில் என்னென்ன பதவிகள் உள்ளன என்பது குறித்த தெளிவான வழிகாட்டல் இருப்பதில்லை. இந்நிலையில் இந்த தேர்வுகள் முழுமையாக இப்பதிவில் காண்போம்.

அதாவது, “TNPSC தேர்வுகள் ஆனது மொத்தம் 8 குரூப்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த ஒவ்வொரு குரூப் தேர்வும் வெவ்வேறு வகையான பதவிகளுக்கான தகுதிகளையும், பணிகளையும் கொண்டிருக்கிறது”. இதில்

  • குரூப் 1 சேவைகள்: துணை கலெக்டர், துணை போலீஸ் சூப்பிரண்டு, மாவட்ட பதிவாளர், ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர்.
  • குரூப் 1A சேவைகள்: உதவி காடுகளின் பாதுகாவலர்
  • குரூப் 1B சேவைகள்: உதவி ஆணையர் H.R & C.E
  • குரூப் 1C சேவைகள்: மாவட்ட கல்வி அலுவலர் (DEO) போன்ற மிகவும் மதிப்புமிக்க பதவிகளைக் கொண்டிருப்பது.
  • குரூப் 2: துணை வணிகவரி அதிகாரி, நகராட்சி ஆணையர், இளைய வேலைவாய்ப்பு அதிகாரி, துணைப் பதிவாளர் போன்ற பல முக்கியப் பதவிகள் இதில் அடங்கும்.
  • குரூப் 2A சேவைகள்: நேர்முகத் தேர்வு இல்லாத பதவிகளான கருவூலம் மற்றும் கணக்குத் துறையில் கணக்காளர், ஜூனியர் கூட்டுறவு கணக்காய்வாளர் போன்ற பதவிகளுக்கான வாய்ப்புகளை வழங்குகிறது.
  • குரூப் 3 சேவைகள்: தீயணைப்பு நிலைய அதிகாரிக்களுக்கான பதவிகளை உள்ளடக்கியது.
  • குரூப் 3A சேவைகள்: கூட்டுறவு சங்கங்களின் ஜூனியர் இன்ஸ்பெக்டர், தொழில்துறை கூட்டுறவு சங்கங்களின் உதவி மேற்பார்வையாளர் போன்ற குறிப்பிட்ட துறைகளில் நிபுணத்துவம் பெற விரும்புவோருக்கு ஏற்றவை.
  • குரூப் 4 சேவைகள்: ஜூனியர் உதவியாளர், பில் கலெக்டர், தட்டச்சு செய்பவர், ஸ்டெனோ-டைப்பிஸ்ட் போன்ற பதவிகள்  எளிதாக அரசுப் பணிக்குச் செல்ல விரும்புபவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.
  • குரூப் 5A சேவைகள்: செயலகத்தில் உதவியாளர் போன்ற சில சிறப்புப் பதவிகள் கொண்டவை.
  • குரூப் 6 சேவைகள்: வன பயிற்சியாளர் போன்ற வனத்துறை சார்ந்த பதவிகள் உள்ளடக்கியது.
  • குரூப் 7A, 7B மற்றும் 8 சேவைகள்: இந்து மத மற்றும் அறக்கட்டளை நிர்வாகத் துறை சார்ந்த தரம் – 1,3 மற்றும் 4 ஆகிய நிர்வாக அதிகாரிகளுக்கான பதவிகள் கொண்டவை.

எனவே உங்கள் தகுதி மற்றும் விருப்பத்திற்கு ஏற்ப சரியான குரூப்பைத் தேர்ந்தெடுத்து, அதில் கவனம் செலுத்துமாறு நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Join the ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!