TNPSC CESE 2023 தேர்வர்கள் கவனத்திற்கு – விடைக்குறிப்பு சற்றுமுன் வெளியீடு!  

0
TNPSC CESE 2023 தேர்வர்கள் கவனத்திற்கு - விடைக்குறிப்பு சற்றுமுன் வெளியீடு!  

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது TNPSC CESE 2023 எழுத்து தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பை சற்றுமுன் வெளியிட்டுள்ளது. இது குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே வழங்கப்பட்டுள்ளது.

TNPSC CESE 2023 விடைக்குறிப்பு:

Assistant Engineer, Manager, Section Officer, Principal ஆகிய பணிகளுக்கென தமிழக அரசு அலுவலகங்களில் ஒதுக்கப்பட்டுள்ள 369 காலியிடங்கள் குறித்த அறிவிப்பானது 13.10.2023 அன்று TNPSC தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டது. இப்பணிகளுக்கு பொருத்தமான நபர்கள் TNPSC CESE 2023 தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளதாகவும் இதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இத்தகைய எழுத்து தேர்வானது 06.01.2024, 07.01.2024 ஆகிய தேதிகளில் திட்டமிட்டபடி நடத்தப்பட்டது.

இந்நிலையில் TNPSC CESE 2023 தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பானது 19.01.2024 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த விடைக்குறிப்பை தேர்வர்கள் https://www.tnpsc.gov.in/ என்ற இணையதள முகவரி அல்லது கீழே தரப்பட்டுள்ள இணைப்பின் மூலம் எளிமையாக ஆன்லைனில் பெற்றுக்கொள்ளலாம். இவ்விடைக்குறிப்பில் தேர்வர்களுக்கு ஏதேனும் மறுப்பு இருப்பின் அதனை தெரிவிக்க 26.01.2024 அன்று வரை கால நேரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வர்களின் மறுப்பு விண்ணப்பங்கள் இணையவழி மூலம் மட்டுமே பெறப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!