TNGASA Counselling Documents Checklist 2026: அசல் சான்றிதழ்கள் பட்டியல் இதோ!

0

TNGASA 2026 Counselling: கல்லூரி சேர்க்கைக்கு தேவையான முக்கிய அசல் சான்றிதழ்கள் (Checklist)

TNGASA 2026 தரவரிசைப் பட்டியல்கள் வெளியாகி வரும் நிலையில், அடுத்தகட்டமாக மாணவர்கள் தங்களின் அசல் சான்றிதழ்களைச் சரிபார்ப்புக்கு (Certificate Verification) தயார் செய்ய வேண்டும். கவுன்சிலிங் தேதிகளில் குறிப்பிட்ட கல்லூரிக்கு நேரில் செல்லும் போது எந்தவொரு சான்றிதழும் விடுபடாமல் இருக்க, கீழே உள்ள பட்டியலை இப்போதே சரிபார்த்துக் கொள்ளுங்கள்.இந்த ஆவணங்கள் சரியாக இருந்தால் மட்டுமே உங்களுக்கான தற்காலிகச் சேர்க்கை ஆணை (Provisional Allotment Letter) உறுதி செய்யப்படும்.

கண்டிப்பாகக் கொண்டு செல்ல வேண்டிய 7 முக்கிய அசல் சான்றிதழ்கள்:

    1. 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள்
      (10th & 12th Mark Sheets):
      உங்களின் பிறந்த தேதி மற்றும் கட்-ஆஃப் மதிப்பெண்களைச் சரிபார்க்க இவை மிக முக்கியம்.
    2. மாற்றுச் சான்றிதழ் (Transfer Certificate – TC):
      நீங்கள் கடைசியாகப் படித்த பள்ளியில் வழங்கப்பட்ட அசல் டிசி கண்டிப்பாகத் தேவை.
    3. சாதிச் சான்றிதழ் (Community Certificate):
      தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட அசல் கம்யூனிட்டி கார்டு அல்லது டிஜிட்டல் சான்றிதழ். (இது இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு மிகவும் இன்றியமையாதது).
    4. ஆதார் அட்டை (Aadhaar Card):
      மாணவரின் அடையாளச் சான்றாக அசல் ஆதார் அட்டை மற்றும் அதன் நகல் தேவை.
    5. TNGASA ஆன்லைன் விண்ணப்பப் படிவம் மற்றும் கட்டண ரசீது:
      ஆன்லைனில் நீங்கள் பதிவு செய்த விண்ணப்பத்தின் பிரிண்ட்-அவுட் (Application Form Copy) மற்றும் ₹50 அல்லது ₹2 செலுத்தியதற்கான கட்டண ரசீது.
    6. சிறப்பு ஒதுக்கீட்டுச் சான்றிதழ்கள் (Special Quota Certificates):
      நீங்கள் விளையாட்டுப் பிரிவு (Sports), மாற்றுத்திறனாளி (Differently Abled), முன்னாள் ராணுவத்தினர் வாரிசு அல்லது NCC பிரிவின் கீழ் விண்ணப்பித்திருந்தால், அதற்கான அசல் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்கள் .
    7. பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்:
      சமீபத்தில் எடுக்கப்பட்ட உங்களது 4 முதல் 6 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்களை கையில் வைத்துக் கொள்ளுங்கள்.

DIRECT LINK

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!