மின்வாரியத்தில் 2400 பேர் நியமனம் – விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் ?

1
மின்வாரியத்தில் 2400 பேர் நியமனம் - விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்
மின்வாரியத்தில் 2400 பேர் நியமனம் - விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்

மின்வாரியத்தில் 2400 பேர் நியமனம் !!!

தமிழக மின் வாரியத்தில் கணக்கீட்டாளர் பதவியில் 1300; இளநிலை உதவியாளர் கணக்கு பதவியில் 500; உதவிப்பொறியாளர் பதவியில் 600 என மொத்தம் 2400 பதவிக்கு ஆட்கள் தேர்வுசெய்யப்பட உள்ளனர். இதற்காக பட்டதாரிகளிடமிருந்து பிப்ரவரி முதல் மார்ச் இறுதி வரை இணையத்தளம் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. எழுத்து தேர்வு நடத்துவது ஊடங்கால் தாமதமாவதால், அதற்கு விண்ணப்பிக்க, மீண்டும் அவகாசம் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு தேர்வர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

2400 பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவரின் விவரம்

மேற்கண்ட 2400 பணியிடங்களுக்கு இதுவரை கணக்கீட்டாளர் பதவிக்கு, 79 ஆயிரம்; உதவியாளர் கணக்கு பதவிக்கு, 32 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். உதவிப்பொறியாளர் பதவிக்கு மட்டும், அதிகபட்சமாக 1.03 லட்சம், இன்ஜினியரிங் பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர்.

விண்ணப்பிக்க அவகாசம் தரப்படுமா?

தற்போது தமிழக அரசு, அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை , 58ல் இருந்து, 59 ஆக அதிகரித்துள்ளது. இதனால், அதிக சம்பளம் பெறும், ஐ.டி., நிறுவன ஊழியர்களுக்கு கூட, அரசு வேலை மீது ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, தேர்வுக்கு விண்ணப்பிக்காதவர்கள், தற்போது, விண்ணப்பிக்கும் வகையில், மின் வாரியம், அதற்கு கூடுதல் அவகாசம் வழங்குமா என்ற எதிர்பார்ப்பு, பட்டதாரிகளிடம் எழுந்துள்ளது. இதுவரை விண்ணப்பத்தவர்கள் இந்த ஊடரங்கு காலத்தில் நேரத்தை வீணடிக்காமல் இப்பதிவிக்குரிய பாடத்திட்டத்தை படித்து பயனடைய கேட்டு கொள்கிறோம். அதற்குரிய முழு தகவல்களை கீழே வழங்கி உள்ளோம்.

Download TNEB Assessor Syllabus | Study Material

Download TNEB AE Syllabus 

Download TNEB Junior Assistant Syllabus

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!