TN TRB உதவி பேராசிரியர் அனுபவ சான்றிதழ் பதிவேற்றம் தேதி 2019 அறிவிப்பு வெளியானது

0

TN TRB உதவி பேராசிரியர் அனுபவ சான்றிதழ் பதிவேற்றம் தேதி 2019 அறிவிப்பு வெளியானது

அரசு கலை (ம) அறிவியல் கல்லூரி மற்றும் கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவிப்பேராசிரியர் காலிப்பணியிடங்களுக்கான பணித்தெரிவிற்காக ஆசிரியர் தேர்வு வாரியத்தால்அறிவிக்கை எண். 12/2019 நாள். 28.08.2019 மற்றும் 04.10.2019 அன்று வெளியிடப்பட்டது.15.11.2019 அன்று வெளியிடப்பட்ட ஆசிரியர் தேர்வு வாரிய பத்திரிக்கை செய்தியில் ஏற்கனவே விண்ணப்பித்து பணி அனுபவச் சான்றுகளை மட்டும் பதிவேற்றம் செய்திடாத விண்ணப்பதாரர்களுக்கு பின்னர் வாய்ப்பு வழங்கப்படும் எனவும், கல்வியியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து சில கூடுதல் விவரங்கள் தேவைப்படுவதால் அவ்விவரங்களை பதிவு செய்திட பின்னர் வாய்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

தற்போது ஏற்கனவே முழுமையாக விண்ணப்பித்து பணி அனுபவச் சான்றுகளை மட்டும் பதிவேற்றம் செய்திடாத விண்ணப்பதாரர்கள் பணி அனுபவ சான்றுகளை மட்டும் பதிவேற்றம் செய்திடவும் (அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பித்தவர்கள் மட்டும்).

மேற்காணும் பதிவுகளை விண்ணப்பதாரர்கள் இணையவழி மூலமாக பணி அனுபவ சான்றிதழ்களை மட்டும் பதிவேற்றம் செய்திடவும் / விண்ணப்ப கட்டணம் செலுத்த தவறியவர்கள் கட்டணம் செலுத்திடவும் 19.12.2019 முதல் 21.12.2019 மாலை 5 மணி வரை இணையவழியில் பதிவேற்றம் செய்திடலாம் என தெரிவிக்கப்படுகிறது. எக்காரணம் கொண்டும் கால அவகாசம் நீட்டிக்கப்படமாட்டாது. எனவே, விரைவான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

Official Site

Notice

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!