தமிழக பள்ளி மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வுகள் – ஆசிரியர்கள் அதிருப்தி!!
நடப்பு கல்வி ஆண்டில் பள்ளிகள் மிகவும் தாமதமாக திறக்கப்பட்ட நிலையில் மாணவர்களுக்கான பாடங்கள் இன்னும் நடத்தி முடிக்காமல் உள்ள நிலையில் அதற்குள் திருப்புதல் தேர்வு தொடங்கியிருப்பதால் ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தாமதமான கல்வி ஆண்டு:
கடந்த மார்ச் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் உள்ள பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கான இறுதித் தேர்வுகள் கூட நடத்தப்படவில்லை. புதிதாக தொடங்கிய 2020-2021 கல்வி ஆண்டு வழக்கம் போல் ஜூன் மாதம் தொடங்கவில்லை. நோய்பரவல் காரணமாக மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்காமல் ஆன்லைன் முறையில் பாடங்களை நடத்த அரசு முடிவு செய்தது.
மார்ச் 8ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு – பிரதமர் அறிவிப்பு!!
பள்ளிகள் திறப்பு:
அதன்படி, தனியார் பள்ளிகள் ஆன்லைன் முறையிலும், அரசு பள்ளிகள் கல்வி தொலைக்காட்சி வழியாகவும் பாடங்களை நடத்தியது. இந்நிலையில் ஜனவரி மாதம் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பள்ளிகள் திறக்கப்பட்டது. மேலும், 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் பிப்ரவரி 8ம் தேதியும் திறக்கப்பட்டது. மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வுகளை பள்ளிகள் நடத்த வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியர்கள் கருத்து:
திருப்புதல் தேர்வு குறித்து ஈரோடு மாவட்ட ஆசிரியர்கள் கூறியதாவது, மாணவர்களுக்கு பாடங்களை இன்னும் முழுமையாக நடத்தி முடிக்கவில்லை. ஆன்லைன் முறையில் பாடங்களை 50% மாணவர்கள் மட்டுமே தொடர்ந்தனர்.
பொதுத் தேர்வு பாடங்களை குறைந்திருந்தாலும், மாணவர்களுக்கு பாடங்களை முழுமையாக ஒரு முறை நடத்த வேண்டி உள்ளது. இதனால் காலை 8:30- 9:30 மணி வரை சிறப்பு வகுப்பு கட்டாயம் நடத்த வேண்டும். மாலையில் 4:30 – 5:30 மணி வரை நடத்தி முடிக்கப்பட்ட பாடங்களுக்கு பாடவாரியாக தேர்வு நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. பாடங்களை முழுமையாக நடத்தி முடிக்கும் முன்னர் தேர்வு நடத்துவதால் மாணவர்கள் சிரமப்பட நேரிடும் என்று ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
Velaivaippu Seithigal 2021
For Online Test Series
கிளிக் செய்யவும்
To Join Whatsapp
கிளிக் செய்யவும்
To Join Facebook
கிளிக் செய்யவும்
To Join Telegram Channel
கிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channel
கிளிக் செய்யவும்