10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரம் !!!!

0
10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரம்
10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரம்

10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரம் !!!!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக முழு ஊரடங்கானது அமல்படுத்தப்பட்டது. இதனால் அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தது. மாணவர்களின் நலன் கருதி பள்ளி மற்றும் கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டிருந்தது.

இதனால் மாணவர்களுக்கான ஆண்டு இறுதி தேர்வு, பொதுத்தேர்வு, செமஸ்டர் தேர்வு என அனைத்தும் தள்ளிவைக்கப்படும், ஒரு சில தேர்வுகள் ரத்து செய்யப்பட்டும் அறிவிப்புகள் வெளியாகியது.தற்போது ஊரடங்கானது படிப்படியாக தளர்த்தப்படுவதால் மாணவர்களுக்கான தேர்வானது நடத்தப்பட ஏற்பாடுகள் நடைபெற தொடங்கி இருந்தது.

பிறகு இந்த 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை ரத்து செய்வதாக தமிழக முதல்வர் அறிவித்தார். மேலும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட காரணத்தால் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மேலும் தேர்வு நடத்தப்படாததினால் மாணவர்களுக்கு தேர்ச்சி விகிதம் ஆனது எவ்வாறு வழங்கப்படும் என்பது குறித்த குழப்பமும் மாணவர்களிடையே ஏற்பட்டுள்ளது. அதற்கு வேறு ஒரு வழிமுறையினை தமிழக அரசு அறிவித்து உள்ளது.

அதாவது 10ம் வகுப்பு மனானவர்களுக்கு அரையாண்டு, காலாண்டு தேர்வுகளின் மதிப்பெண்கள் அடிப்படையில் 80 சதவீத மதிப்பெண்கள் மற்றும் வருகைப் பதிவேடு அடிப்படையில் 20 சதவீத மதிப்பெண்கள் வழங்கப்படும் என அறிவித்து உள்ளது. காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் மாணவர்கள் தேர்ச்சி பெறாமல் இருந்தால் அவர்களுக்குரிய தேர்ச்சி முறை குறித்து பரிசீலிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்து உள்ளார்.

இதன் மூலமாகவே தேர்ச்சி அறிவிக்கப்படும் எனவும் தேர்வு நடத்தப்படமாட்டாது எனவும் தமிழக அரசு அறிவித்து உள்ளது. இதனால் தற்போது தேர்ச்சி வழங்கும் பணி அரசாங்கத்திடம் உள்ளதால் மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி மிக தீவிரமாக நடந்து கொண்டு உள்ளது.

மாணவர்களின் வருகை பதிவேட்டினை மாவட்ட கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு பள்ளிகளுக்கு கல்வித்துறை செயலர் அறிவிப்பு வழங்கியுள்ளார். எனவே இந்த பணிகள் தற்போது வேகமெடுத்து நடக்கத் தொடங்கியுள்ளது. 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான பின், 10 வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!