TN Ration Shop Result: தமிழக ரேஷன் கடை தேர்வு முடிவுகள் வெளியீடு., முழு விவரம் உள்ளே!!
கூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்படும் நியாய விலைக்கடைகளுக்கான விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த ஆட்சேர்ப்பு அறிவிப்பின் மூலம் மொத்தம் 6000 க்கு மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இப்பணியிடங்கள் எழுத்துத் தேர்வும் இல்லாமல், கல்வித் தகுதி மற்றும் நேர்முகத் தேர்வில் (50:50 மதிப்பெண்கள்) பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அதன் படி, அரியலூர், செங்கல்பட்டு, சென்னை, கோயம்புத்தூர், கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நாமக்கல்,நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தென்காசி,தஞ்சாவூர், தேனி, தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி, திருப்பூர், திருப்பத்தூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், வேலூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் நடைபெற்ற ரேஷன் கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் பதவிகளுக்கான நேர்காணல் முடிவுகள் tncsc.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் வெளியாகி உள்ளது. இதன் முடிவுகளை விண்ணப்பதாரர்கள் இணையதளத்தில் காண அறிவுத்தப்படுகிறார்கள்.


























