நீட் தேர்வுக்கான இணையதள பயிற்சி வகுப்பு – முதல்வர் தொடங்கி வைத்தார் !

0
நீட் தேர்வுக்கான இணையதள பயிற்சி வகுப்பு
நீட் தேர்வுக்கான இணையதள பயிற்சி வகுப்பு

நீட் தேர்வுக்கான இணையதள பயிற்சி வகுப்பு – முதல்வர் தொடங்கி வைத்தார் !

நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் சேருவதற்கு மாணவர்களுக்காக நீட் தேர்வானது மத்திய அரசால் தொடங்கப்பட்டது. இந்த மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம். நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடக்கிறது.

அதனை கருத்தில் கொண்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டது. அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் கடந்த 2017 – 2018ம் கல்வி ஆண்டு முதல் இலவச நீட் பயற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டிற்கான நீட் பயிற்சி வகுப்புகள் கடந்த வருட இறுதி முதல் நடைபெற்று வந்தது. இடையில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வந்ததால் தலைவைக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு கொரோனா வைரஸ் தொற்று பரவலால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் வகுப்புகள் முற்றிலுமாக தள்ளிவைக்கப்பட்டது.

தற்போது தேர்வர்களுக்கான நீட் தேர்வு பயிற்சி வகுப்பு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இம்முறை Amphisoft Technologies என நிறுவனத்தின் உதவியுடன் பயிற்சி வகுப்பானது ஆன்லைனில் மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆண்டு மட்டும் 12-ம் வகுப்பு மாணவர்கள் 7,420 பேர் நீட் இணைய பயிற்சிக்கு விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!