தமிழகத்தில் முதியோர் உதவித்தொகை பெறுவோர் கவனத்திற்கு – அமைச்சர் முக்கிய தகவல்!

0
தமிழகத்தில் முதியோர் உதவித்தொகை பெறுவோர் கவனத்திற்கு - அமைச்சர் முக்கிய தகவல்!
தமிழகத்தில் முதியோர் உதவித்தொகை பெறுவோர் கவனத்திற்கு – அமைச்சர் முக்கிய தகவல்!

தமிழகத்தில் இன்று நடைபெற்ற வருவாய் துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் அமைச்சர், முதியோர் உதவித் தொகைக்கு செல்போன் மூலம் விண்ணப்பிக்கும் முறை விரைவில் கொண்டு வரப்படும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.

புதிய வழிமுறை:

தமிழகத்தில் முதியோர் ஓய்வூதிய உதவித் தொகை திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இந்த திட்டம் மூலம் அறுபது வயதிற்கு மேற்பட்ட மக்கள் மற்றும் எவாின் ஆதரவு இன்றி வாழும் முதியோர்களுக்கு மாதம் ரூ.1000 வீதம் வழங்கப்படுகிறது. ஆதரவற்ற முதியோர் எனக் கருதப்படும் ஆண், பெண் யாரும் தாலுகா அலுவலகங்களில் கிடைக்கும் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, அதற்குத் தேவையான வயது, இருப்பிடச்சான்றுகளை இணைத்து சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பம் அளிக்க வேண்டும். தமிழக சட்டப்பேரவையில் வருவாய்த்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் விடுமுறை? கல்வித்துறை பரிசீலினை!

அப்போது பேசிய வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், அனைத்து சான்றிதழ்களும் செல்போன் மூலம் பெரும் வசதியை 2 ஆண்டுகளுக்குள் கொண்டு வருவதாக அறிவித்தார். பிறப்பு சான்றிதழ் முதல் இறப்பு சான்றிதழ் வாங்குவதற்கு பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் பல நாட்கள் காத்து கிடப்பதாகவும் பல புகார்கள் எழுந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் சட்டப்பேரவையில் பேசிய வருவாய்த்துறை அமைச்சர், ஒரு சான்றிதழை குறிப்பிட்ட நாட்களுக்குள் கொடுக்க வேண்டும் என்ற வரையறையை கொண்டு வர வேண்டுமென நினைக்கிறேன். சாதிச் சான்றிதழை 7 நாட்களுக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வட்டாட்சியர் அலுவலகத்தில் கூட்டம் கூடுவதே இருக்கக்கூடாது, இதனால் செல்போனில் வசதிகள் கிடைக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இந்த வகையில் இ-சேவை மையத்தில் சரியான ஆவணங்களுடன் விண்ணப்பித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் குறிப்பிட்டார். மேலும், முதியோர் உதவித்தொகைக்கு செல்போன் மூலம் விண்ணப்பிக்கும் முறை விரைவில் கொண்டு வரப்படும் என்றும் நடப்பாண்டில் மேலும் 3 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார். இதை தொடர்ந்து 274 VAO பணியிடங்கள் நிரப்பப்படும், 10 வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு புதிய கட்டடங்கள், 50 வருவாய் நிர்வாக அலுவலகங்களுக்கு புதிய கட்டிடங்கள் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!