தமிழக அரசு செவிலியர் பயிற்சி பள்ளி – மாணவியர் சேர்க்கை அறிவிப்பு!!
மாணவியர் சேர்க்கை:
ராமநாதபுரத்தில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அருகிலேயே செவிலியர் பயிற்சி பள்ளி செயல்படுகிறது. செவிலியர் பயிற்சி பள்ளிகளுக்கான முன்மாதிரியாக இந்த பள்ளி செயல்படுகிறது. வரும் ஆண்டிற்கான செவிலியர் பயிற்சிக்கான 100 காலி இடங்களுக்கு மாணவியர் சேர்க்கை அங்கு நடக்கிறது. இதற்கான இடஒதுக்கீடு மூன்று பிரிவுகளாக நடத்தப்படுகிறது.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு அட்டவணை – ஆசிரியர்கள் அதிருப்தி!!
அதன்படி, மூன்றாண்டு செவிலியர் பட்டய படிப்பிற்கு 12ம் வகுப்பில் அறிவியல் பாடத்தில் தேர்ச்சியடைந்தவர்கள் 70%, செவிலியர் சார்ந்த படிப்புகளை சேர்ந்தவர்கள் 25%, பிற பாடங்களை படித்தவர்கள் 5% பேரும் தேர்வு செய்யப்படுவார்கள்.
செவிலியர் பயிற்சிக்கான விண்ணப்பத்தினை மாநில மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின் இணையதளத்தில் பிப்ரவரி 23ம் தேதிக்குள் பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை பிப்ரவரி 25ம் தேதிக்குள் சென்னை மருத்துவக்கல்வி இயக்குநரகத்திற்கு அனுப்ப வேண்டும் என்று பயிற்சி மைய முதல்வர் பார்த்திபன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்