
அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. இனி மருத்துவ படிப்பிற்கு 10 % இட ஒதுக்கீடு.. அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்..!!
தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு தேசிய அளவிலான தகுதித் தேர்வான நீட் (NEET) கட்டாயமாக்கப்பட்ட நிலையில், மருத்துவ கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு போதுமான இடங்கள் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து, அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 % இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு சட்டம் ஒன்றை இயற்றியது.
மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் ரூ.30,600/- வேலை – தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே!
இந்நிலையில் “அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ இட ஒதுக்கீட்டை 7.5% இல் இருந்து 10% ஆக உயர்த்துவது குறித்து சட்ட விதிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும், இது குறித்து சட்ட வல்லுநர்களுடன் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் ஆலோசனை நடத்தி தகுந்த முடிவை வெளியிடுவார் என்றும், இட ஒதுக்கீடு உயர்வு மாணவர்களுக்கு பெரிய அளவிலான நன்மை பயக்கும்” என்று தெரிவித்துள்ளார்.


























