தீபாவளி சர்ப்ரைஸ்.. போக்குவரத்து ஊழியர்களுக்கு போனஸ் அறிவித்த தமிழக அரசு!!
தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகம், டாஸ்மாக் போன்ற துறை ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் தீபாவளி போனஸ் 20 சதவீதமாக வழங்க வேண்டும் என அரசு போக்குவரத்து துறை ஊழியர்கள் கோரிக்கை வைத்து இருந்தனர். தற்போது இது தொடர்பாக ஓர் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதாவது போக்குவரத்து ஊழியர்களுக்கு அவர்களின் கோரிக்கையை ஏற்று தீபாவளி போனஸ் வழங்கியுள்ளது. நேற்றிரவு வங்கிகளுக்கு பட்டியல் அனுப்பப்பட்டு இன்று (அக்டோபர் 29) காலை முதல் ஊழியர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. போனஸ் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வந்த நிலையில் வரவு வைக்கப்பட்டது.
























