பிளஸ் 1 விடைத்தாள் நகல் மறுகூட்டல் – இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் பிளஸ் 1 மற்றும் 2 படித்த மாணவர்கள் தங்களின் தேர்வு விடைத்தாள்களின் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என கல்வித்துறை அறிவித்து உள்ளது.
மாணவர்கள் தங்களின் பள்ளிகள் மூலமாகவும், ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பித்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. விடைத்தாள்களின் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் ஆகஸ்ட் 5 முதல் 12 வரையிலும் , பிளஸ் 2 மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்போர் ஆகஸ்ட் 5,6,7 ஆகிய தேதிகளில் விண்ணப்பிக்கலாம்.
விடைத்தாள் நகலிற்கு அனைத்து பாடங்களுக்கும் ரூ. 275 /- செலுத்த வேண்டும். பிளஸ் 2 மாணவர்கள் உயிரியல் பாடத்திற்கும் ரூ. 305/- மற்றும் மற்ற பாடங்களுக்கு ரூ. 275 /- செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |