TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – என்ன, எப்படி படிக்கலாம்?

0
TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு - என்ன, எப்படி படிக்கலாம்?
TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு - என்ன, எப்படி படிக்கலாம்?
TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – என்ன, எப்படி படிக்கலாம்?

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 VAO ஆகிய தேர்வுகளை நடத்தி அரசு அலுவலக பணிகளுக்கு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியில் நியமிக்கப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது குரூப்-2, குரூப்-2A தேர்வு, மே21ம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில் குரூப்-2, குரூப்-2A தேர்வுக்கு தயாராவது எப்படி, என்னென்ன புத்தகங்கள் படிக்கலாம்? என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

முழு விவரம்:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த மாதம் குரூப்-2 தேர்வுகான அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பு அடிப்படையில் கடந்த 23-ம் தேதி முதல் பட்டதாரிகள் விண்ணப்பித்து வருகின்றனர். குரூப்-2 தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 23-ம் தேதி கடைசி நாள் ஆகும். தமிழகத்தில் அதிக அளவில் எதிர்பார்க்கப்படும் தேர்வு இதுவாகும். இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி, துணைப் பதிவாளர், வருவாய் உதவியாளர், உதவியாளர், அலுவலக உதவி அதிகாரி உள்ளிட்ட முக்கிய பணிகளுக்கு பட்டதாரிகளை தேர்வு செய்ய இத்தேர்வு நடத்தப்படுகிறது. மொத்தம் 5529 பணியிடங்கள் உள்ளன.

தமிழக அரசு கணினி ஆசிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – அறிவிப்பு வெளியிடுவாரா முதல்வர்?

இந்த தேர்வுக்கு தயாராவதற்கு முதலில் தேர்வுக்கான பாடத்திட்டத்தை தேர்வாணைய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். மேலும் நாட்டு நடப்பு குறித்த அடிப்படை அறிவு, பொது அறிவு, மொழி அறிவு, திறனறிதல் ஆகியவையே தேர்வுக்கான அடிப்படை. அறிவியல் மற்றும் சமூக அறிவியலின் அடிப்படைகளை தெரிந்து கொள்ள தமிழ்நாடு அரசு பாடநூல் கழகத்தின் பாட புத்தகங்களை படிக்க வேண்டும். பொது அறிவைப் பொறுத்தமட்டில், தமிழகத்தின் வரலாறு, பூகோளம் மற்றும் மாநிலம் தொடர்பான விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளித்து கேள்விகள் இடம்பெறும்.

இதற்கு மனோகர் பாண்டே எழுதி அரிஹந்த் பப்ளிகேஷன் வெளியிட்டுள்ள அரிஹந்த் ஜிகே புத்தகம், பஷீர் அகமது, சாம்பசிவம் எழுதி சக்தி பப்ளிகேஷன் வெளியிட்டுள்ள குரூப்-2ஏ புத்தகம், கார்த்திகேயன் எழுதி டாடா மெக்ராஹில் வெளியிட்டுள்ள புத்தகம் மிகவும் பயனுள்ள புத்தகமாக இருக்கும். திறனறிதல் பாடத்திற்கு சுப்புராஜ் எழுதி சுரா பதிப்பகம் வெளியிட்டுள்ள குரூப்-2 ஆப்டிடியூட் புத்தகம், சாக்ஷி பதிப்பகம் வெளியிட்டுள்ள மென்டல் எபிலிடி டெஸ்ட் புத்தகம், அரிஹந்த் பதிப்பகத்தின் பி.எஸ்.சிஜ்வாலி, எஸ்.சிஜ்வாலி எழுதிய ‘எ நியூ அப்ரோச் டு ரீசனிங்’ ஆகிய புத்தகங்கள் பயனுள்ளதாக இருக்கும். தமிழ் மற்றும் ஆங்கிலத்திற்கு சக்தி பதிப்பகத்தின் TNPSC சுப்ரீம் கைடு மற்றும் தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் பாட நூல்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

தமிழக முதல்வர் ஆபீஸில் வேலை – மாதம் ரூ.60,000 சம்பளம்! விண்ணப்பிக்க முழு விபரங்கள் இதோ!

பொது ஆங்கில அறிவுக்கு எஸ்.ஓ.பக்ஷி எழுதி அரிஹந்த் பதிப்பகம் வெளியிட்டுள்ள அப்ஜெக்டிவ் ஜெனரல் இங்கிலீஷ் ஆகியவை பயனுள்ளவையாக இருக்கும். நேர்முகத் தேர்வுக்கு பெக்கி மெக்கியின் கரியர் கான்பிடென்ஷியல், ரிச்சர்டு பிளாசவிக்கின் ‘அமேசிங் இன்டர்வியூ ஆன்சர்ஸ்’ மற்றும் ஜிகேபி பப்ளிஷர்சின் இன்டர்வியூ அண்டு ஜிடி போன்ற புத்தகங்கள் உதவிகரமாக அமையும். இதுதவிர முந்தைய ஆண்டுகளின் கேள்வித்தாள்களை படிப்பது அவசியம். பல இணையதளங்கள் குரூப்-2 தேர்வுக்கான தொடர் பயிற்சித் தேர்வுகளையும் நடத்துகின்றன. அதில் பங்கேற்று பயிற்சி எடுப்பதன் மூலம் குரூப்-2 தேர்வில் வெற்றி நிச்சயம் ஆகும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!