தமிழக முதல்வர் ஆபீஸில் வேலை – மாதம் ரூ.60,000 சம்பளம்! விண்ணப்பிக்க முழு விபரங்கள் இதோ!

0
தமிழக முதல்வர் ஆபீஸில் வேலை - மாதம் ரூ.60,000 சம்பளம்! விண்ணப்பிக்க முழு விபரங்கள் இதோ!
தமிழக முதல்வர் ஆபீஸில் வேலை - மாதம் ரூ.60,000 சம்பளம்! விண்ணப்பிக்க முழு விபரங்கள் இதோ!
தமிழக முதல்வர் ஆபீஸில் வேலை – மாதம் ரூ.60,000 சம்பளம்! விண்ணப்பிக்க முழு விபரங்கள் இதோ!

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகளை அரசு அறிவித்து வருகிறது. இதனை தொடர்ந்து தமிழக முதல்வர் ஆபிஸில் தகுதியான நபர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வேலைவாய்ப்பு:

தமிழகத்தில் பொதுமக்களின் குறைகளை நிறைவேற்றும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார். இதனை தொடர்ந்து பல்வேறு துறைகள் மற்றும் திட்டங்களைத் தொகுத்து செயல்படுத்துதல், கண்காணித்தல் மற்றும் மதிப்பீடு செய்தல் உள்ளிட்டவைகளுக்காக பெல்லோஷிப் திட்டத்தை முதல்வர் அறிமுகப்படுத்தினார். இதில் 12 கருப்பொருள் பகுதிகளில் ஒரு பகுதிக்கு 2 பேர் வீதம் 24 பேர் நியமிக்கப்படுவார்கள். தற்போது இந்த பணியிடத்தில் தகுதியான நபர்களை நியமிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

தமிழகத்தில் அரசு வேலை தேடுபவர்களுக்கு சமூகநல துறையில் வேலை!

இப்பணிக்கு விண்ணப்பிக்க பொறியியல், மருத்துவம், சட்டம், வேளாண்மை, கால்நடை மருத்துவ அறிவியல் உள்ளிட்ட படிப்புகளில் இளங்கலை தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். மேலும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் முதுகலை பட்டம் பெற்றவர்களும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதில் முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. பணி அனுபவம் பெற்றவராக இருந்தாலும் முன்னுரிமை வழங்கப்படுகிறது. பெல்லோஷிப்பிற்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் 22 முதல் 30 வயது வரை உள்ளவராக இருக்க வேண்டும்.

சபரிமலை ஐயப்பன் பக்தர்களுக்கு ஹாப்பி நியூஸ் – கட்டுப்பாடுகளின்றி தரிசனத்திற்கு அனுமதி!

இதில் SC/ST பிரிவைச் சேர்ந்தவர்கள் 35 வயது வரை உள்ளவர்களாக இருக்கலாம். இதே போல் BC/MBC வகுப்பினர்கள் 33 வயது பெற்றவர்களாக இருக்கலாம். இதில் தகுதியான நபர்கள் முதல்நிலை தேர்வு, விரிவான தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இதில் நியமிக்கப்படுபவர்களுக்கு மாதந்தோறும் ரூ.50,000 ஊதியமாக வழங்கப்படுகிறது. அத்துடன் மேலும் கூடுதல் செலவினங்களை கையாள கூடுதலாக ரூ10,000 என மொத்தமாக ரூ.60000 வரை வழங்கப்படுகிறது. இதில் குறைவான அளவில் பணியிடங்கள் உள்ளதால் விண்ணப்பத்தார்கள் விரைவில் விண்ணப்பிக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!