PAN கார்டை Aadhaar உடன் இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு – ஒன்றிய அரசு முக்கிய அறிவிப்பு!

0
PAN கார்டை Aadhaar உடன் இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு - ஒன்றிய அரசு முக்கிய அறிவிப்பு!
PAN கார்டை Aadhaar உடன் இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு - ஒன்றிய அரசு முக்கிய அறிவிப்பு!
PAN கார்டை Aadhaar உடன் இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு – ஒன்றிய அரசு முக்கிய அறிவிப்பு!

பான் அட்டையை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான கடைசி தேதி மார்ச் 31, 2022 என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஆதாருடன் பான் கார்டை இணையதளம், குறுஞ்செய்தி ஆகிய இரு முறைகளில் மூலம் எப்படி இணைப்பது என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

கால அவகாசம் நீட்டிப்பு:

இந்தியாவில் பான் கார்டு என்பது தனிநபரின் மிக முக்கியமான ஆவணமாக கருதப்படுகிறது. மேலும் வங்கி கணக்கு, பங்கு வர்த்தக கணக்கு, வீட்டுக் கடன் கணக்கு, மோட்டார் வாகனம் வாங்க கடன், சொத்துக்கள் வாங்க என அனைத்து வகையான பயன்பாட்டிற்கும் இந்த பான் கார்டு அவசியம் என அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால்தான் ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு, போன்றவற்றில் பான் கார்டை இணைப்பது மத்திய அரசால் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தின் 2 நகரங்களில் மட்டும் ஊரடங்கு அமல் – பிப்.21 முதல் பள்ளி & கல்லூரிகள் முழுமையாக திறப்பு!

இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் 2021 நிதி மசோதாவில் ஆதார் எண்ணை பான் அட்டையுடன் இணைக்க தவறும் பயனர்களிடமிருந்து அபராதம் வசூலிக்கப்படும் என முடிவெடுக்கப்பட்டது. இருப்பினும் கொரோனா காலகட்டத்தில் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தால் ஆதார் – பான் இணைப்புக்கு அரசு மூன்று முறை கால நீட்டிப்பு வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வகையில் தற்போது ஆதார் எண்ணை PAN கார்டுடன் இணைப்பதற்கான காலக்கெடு மார்ச் 31, 2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – புகார் அளிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்!

ஆதார் அட்டையை பான் கார்டுடன் இணைக்க தவறினால் அபராதம் விதிக்கவும் ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், குறிப்பிட்ட தேதிக்குள் இதை செய்யவில்லை என்றால், பயனாளிகளின் பான் அட்டை முடக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் இதுவே கடைசியாக வழங்கப்பட்ட காலக்கெடு என்றும் அரசு தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைப்பதற்கான எளிய வழிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.

ஆன்லைன் மூலம் ஆதார் எண்ணை பான் அட்டையுடன் இணைக்கும் வழிமுறைகள்:

1.வருமான வரித்துறை இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் ஆதார் இணைப்பிற்கான இந்த லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.

2.இந்த தளத்தில் உங்கள் தகவல்களை பதிவு செய்ய வேண்டும்

3.இதில் ‘USER ID’ கேட்கப்பட்டிருக்கும். அந்த இடத்தில் உங்கள் பான் எண்ணை உள்ளிடவும்.

4.தொடர்ந்து அதில் கேட்கப்படும் தகவல்களைக் கொடுத்து பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும்

குறுஞ்செய்தி (SMS) மூலம் ஆதார் எண்ணுடன் பான் கார்டை இணைக்கும் வழிமுறைகள்:

1.உங்கள் ஆதார் எண், பான் எண்ணை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.

2.மொபைலில் மெசேஜ் பகுதிக்கு சென்று ‘Create New Message’ என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

3.தொடர்ந்து UIDPAN இடைவெளி விட்டு 12 இலக்க ஆதார் எண் இடைவெளி விட்டு 10 இலக்க பான் எண்ணை டைப் செய்து 56161 என்ற எண்ணுக்கு SMS அனுப்பவேண்டும்.

4.ஆதார் எண்ணுடன் பான் அட்டை வெற்றிகரமாக இணைக்கப்பட்டது என்ற தகவல் உங்கள் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும்

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!