இந்தியாவில் “இவர்களுக்கு” குடும்ப ஓய்வூதியம் கிடையாது – ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு!

0
இந்தியாவில்
இந்தியாவில் "இவர்களுக்கு" குடும்ப ஓய்வூதியம் கிடையாது - ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு!
இந்தியாவில் “இவர்களுக்கு” குடும்ப ஓய்வூதியம் கிடையாது – ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு!

இந்தியாவில் அரசு பணிகளில் பணியாற்றி ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இதையடுத்து ஊழியர் மரணம் அடையும் போது குடும்ப ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த குடும்ப ஓய்வூதியம் பெறுவதில் ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

குடும்ப ஓய்வூதியம்

இந்தியாவில் அரசு பணிகளில் பணியாற்றி ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், தற்போது பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு புதிய ஓய்வூதியம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தில் கிடைக்கும் பலன்கள் கிடைப்பதில்லை என்று வருத்தம் தெரிவிக்கின்றனர். இதையடுத்து, பல்வேறு இடங்களில் அரசு ஊழியர்கள் தங்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்றும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடன் செயலிகளுக்கான புதிய வழிமுறைகள் – ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

மேலும் இது போன்ற ஓய்வூதியத்தில் பல்வேறு மாற்றங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது குடும்ப ஓய்வூதியம் தொடர்பாக இமாச்சல பிரதேச ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதாவது, காவல்துறையில் பஹொலா ராம் என்பவர் 1983 வரை பணியாற்றியுள்ளார். இவர் கடந்த 2002ம் ஆண்டு உயிரிழந்துள்ளார். ஆனால் இவருக்கு ராம்கு தேவி மற்றும் துர்கி தேவி என்ற இரு மனைவிகள் உள்ளனர். இவர் தனது குடும்ப ஓய்வூதியத்தில் 2 மனைவிகள் பெயரையும் வழங்கியுள்ளார். இதையடுத்து குடும்ப ஓய்வூதியத்தை முதல் மனைவி பெற்று வந்தார்.

Exams Daily Mobile App Download

ஆனால் முதல் மனைவியும் கடந்த 2015ம் ஆண்டு இறந்துள்ளார். இதையடுத்து மரணத்தையடுத்து குடும்ப ஓய்வூதியம் தனக்கு வழங்க வேண்டும் என பஹொலா ராமியின் 2வது மனைவி ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளார். இது தொடர்பாக நீதிபதி தெரிவித்துள்ளதாவது, முதல் மனைவி உயிருடன் இருக்கும் போதே பஹொலா ராம் 2வது திருமணம் செய்துள்ளார். அதனால் 2வது மனைவியாக குடும்ப ஓய்வூதியம் பெற இவருக்கு உரிமையில்லை என்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி மனுதாரர்களுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்பட மாட்டாது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!