இனி TNPSC தேர்வில் இவர்களுக்கே முன்னுரிமை..!! புதிய அரசாணை வெளியீடு…!!
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான தேர்வர்கள் TNPSC குரூப் தேர்வுகளை எழுதிகின்றனர். இந்நிலையில், தற்போது இந்த தேர்வின் விதிகளில் சில மாற்றங்களை செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுவரை, தமிழ் வழியில் பயின்ற அனைவருக்கும் தமிழக அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்கப்பட்டு வந்ததை நாம் அனைவரும் அறிவோம்.
அணு ஆயுதங்களால் பதிலடி தருவோம்..!! பாகிஸ்தான் அமைச்சரின் பேச்சால் பரபரப்பு..!!
இந்நிலையில், இனி மேல் 1 முதல் வரையறுக்கப்பட்ட கல்வித்தகுதி வரை முழுவதுமாக தமிழில் பயின்றவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, 1 ஆம் வகுப்பில் பள்ளியில் சேராமல், கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் 2 ஆம் வகுப்பில் பள்ளியில் சேர்ந்து 8 ஆம் வகுப்பு வரை தமிழ் மொழியை பயிற்று மொழியாக கொண்டு பயின்றவர்களுக்கும், பிற மாநிலங்களில் தமிழ் மொழியை பயிற்று மொழியாக கொண்டு பயின்று, பின்னர் தமிழகத்தில் தமிழ் வழியில் கல்வியை தொடர்ந்தவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிற மொழிகளை பயிற்று மொழிகளாக கொண்டு தமிழில் மட்டும் தேர்வு எழுதியவர்களும், பள்ளிக்கு செல்லாமல் நேரடி தனி தேர்வர்களாக தமிழில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


























