Gold Rate Today: இன்று ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை.. தற்போது எவ்வளவு தெரியுமா..??
கடந்த ஓரிரு மாதங்களாக தொடர்ந்து உச்சம் கண்டு வந்த தங்கத்தின் விலை, சில நாட்களாக சரிவை சந்தித்து வந்தது. அந்த வகையில் நேற்று (08-04-2025) சவரனுக்கு ரூ.200 குறைந்து, ரூ.66,280 ஆக விற்பனை செய்யப்பட்டது. இதனால் தங்கம் விலை தொடர்ந்து குறையும் என பொதுமக்கள் எதிர்பார்த்திருந்த வேளையில், இன்று (09-04-25) 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.65 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.8,290 ஆகவும், ஒரு சவரன் தங்கம் ரூ.66,320 ஆக விற்பனை செய்யப்பட்டு வந்தது.
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற சட்ட போரட்டம்…!! வரைவு தீர்மானத்தை வாசித்தார் துணை முதல்வர்..!!
இந்நிலையில் ஒரே நாளில் இரண்டு முறை விலை உயர்ந்துள்ளது தற்போது மக்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. அதாவது, “சென்னையில் தற்போது 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.960 அதிரடியாக உயர்ந்து, ஒரு சவரன் ரூ.67,280 ஆகவும், கிராமுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,410 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து, வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.104 ஆகவும், ஒரு கிலோ ரூ.1,04,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது. மேலும், தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,480 உயர்ந்துள்ளது சாமானிய மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது”.


























