Today Gold Rate: வாரத்தின் முதல் நாளே எகிறிய தங்கம் விலை.. தமிழகத்தில் இன்று எவ்வளவு தெரியுமா..??
உலகப் பொருளாதார நிலையற்ற சூழல் காரணமாக சர்வதேச சந்தைகளில் தங்கத்தின் விலையானது அதிகரித்து வந்தது. இந்நிலையில் அட்சய திருதியை முன்னிட்டு உச்சத்தில் இருந்த தங்கம் விலை, அதற்கு அடுத்த நாட்களில் குறைய தொடங்கியது. இதனால் சாமானிய மக்கள் மற்றும் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்தனர். அந்த வகையில் தமிழகத்தில் நேற்று (04-05-2025) தங்கத்தின் விலையானது ஒரு கிராம் ரூ.8,755 ஆகவும், ஒரு சவரன் தங்கம் ரூ.70,040 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து, “இன்று (05-05-2025) தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,775-க்கும், சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.70,200-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், வெள்ளி விலை எவ்வித மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.108-க்கும், ஒரு கிலோ ரூ.1,08,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது”.



























