
இனி உங்க PF பணத்தை ஏடிஎம் யிலே எடுக்கலாம்…!! எப்போ அமலுக்கு வருதுன்னு தெரியுமா…?? இதோ உங்களுக்காக
மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, வருங்கால வைப்பு நிதி ஆணையத்தின் புதிய “EPFO 3.0” திட்டம் விரைவில் அறிமுகமாகும் என்று சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதாவது, இத்திட்டத்தின் மூலம் ஊழியர்கள் தங்களது PF பணத்தை, வங்கி ஏடிஎம் யில் பணம் எடுப்பது போலவே எடுத்துக்கொள்ளலாம் என்றும், இனிமேல் வங்கி பரிவர்த்தனைகள் போன்றே PF பரிவர்த்தனைகளும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது.
மேலும், இத்திட்டத்தின் மூலம் ஊழியர்களுக்கு தனிப்பட்ட ஒரு பொது கணக்கு எண் வழங்கப்படும் என்றும், அதன்மூலம் அவர்களுக்கு தேவைப்படும் போது PF பணத்தை எடுத்துக்கொள்ளலாம் என்றும் அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், தற்போது மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சக செயலாளர் சுமிதா இதுகுறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, “ஊழியர்கள் தங்களது PF பணத்தை ஏடிஎம் யில் எடுக்கும் வசதி வருகின்ற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் இருந்து அமலுக்கு வரும்” என்று அறிவித்துள்ளார்.

























