உருவானது ஃபெங்கல் புயல்… 7 மாவட்டங்களுக்கு  ரெட் அலர்ட்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…

0
???????? ???????? ?????... 7 ???????????????  ???? ??????... ?????? ????? ????? ??????????...
உருவானது ஃபெங்கல் புயல்... 7 மாவட்டங்களுக்கு  ரெட் அலர்ட்... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை...

உருவானது ஃபெங்கல் புயல்… 7 மாவட்டங்களுக்கு  ரெட் அலர்ட்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…

 

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிவந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளதாக  இந்திய வானிலை ஆய்வு மையம்  அறிவித்துள்ளது. மேலும், நாளை இந்த புயல்  காரைக்கால்- மாமல்லபுரம் இடையே கரையை கடக்க உள்ளது.  இதனால், அதிகனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் கடலூர் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் “ரெட் அலர்ட்” எச்சரிக்கை விடுத்துள்ளது.  மேலும், புயல் கரையை கடக்கும் போது 90 கி.மீ வேகத்தில்  காற்று வீசக்கூடும் என்பதால் மக்கள் எச்சரிக்கையோடு இருக்கும் படி அறிவுறுத்தியுள்ளது.

 

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!