THDC Assistant Manager & Senior Medical Officer வேலைவாய்ப்பு 2025 – ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்!

0
THDC Assistant Manager & Senior Medical Officer வேலைவாய்ப்பு 2025 – ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்
THDC Assistant Manager & Senior Medical Officer வேலைவாய்ப்பு 2025 – ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்

THDC Assistant Manager & Senior Medical Officer வேலைவாய்ப்பு 2025 – ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்

Tehri Hydro Development Corporation – THDC நிறுவனம் சார்பில் அசிஸ்டென்ட் மேனேஜர் (Assistant Manager) மற்றும் சீனியர் மெடிக்கல் ஆபிசர் (Senior Medical Officer) பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 40 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தகுதியும் அனுபவமும் பெற்ற விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான thdc.co.in மூலம் ஆன்லைன் (Online) முறையில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 06 டிசம்பர் 2025 ஆகும்.

காலியிடங்கள்

பணியின் பெயர் காலியிடங்கள்
Assistant Manager (Civil) 15
Assistant Manager (Electrical) 10
Assistant Manager (Mechanical) 10
Senior Medical Officer 05
மொத்தம் 40

கல்வித்தகுதி 

  • Assistant Manager (Civil / Electrical / Mechanical):
    முழுநேர B.E / B.Tech / B.Sc (Engg.) பட்டம் சம்பந்தப்பட்ட துறையில் 60% மதிப்பெண்களுடன் பெற்றிருக்க வேண்டும்.

  • Senior Medical Officer:
    மருத்துவ கவுன்சில் ஆஃப் இந்தியா அங்கீகரித்த நிறுவனத்தில் MBBS பட்டம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் மருத்துவ கவுன்சில் பதிவு கட்டாயம்.

வயது வரம்பு

  • Assistant Manager: 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

  • Senior Medical Officer: 37 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

  • அரசு விதிகளின்படி வயது சலுகை வழங்கப்படும்.

CPCL Apprentice வேலைவாய்ப்பு 2025 –அப்பிரண்டிஸ் பணியிடங்கள் | B.A, B.Com, B.Sc, Diploma, ITI தகுதி 

சம்பள விவரம் 

பதவிகளுக்கு E-3 Grade Pay Scale – ₹60,000 – 1,80,000 வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம் 

வகை கட்டணம்
பொதுப்பிரிவு (UR), OBC, EWS ₹600/-
SC / ST / PwBD / Ex-Servicemen கட்டணம் விலக்கு (Nil)

தேர்வு நடைமுறை 

  1. விண்ணப்பத் தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் Screening Test

  2. தனிப்பட்ட நேர்முகத் தேர்வு (Personal Interview)

  3. இரண்டு கட்டங்களிலும் தேர்ச்சி பெற்றால் மட்டுமே நியமனம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

  • விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான www.thdc.co.in சென்று Online Application Form பூர்த்தி செய்ய வேண்டும்.

  • விண்ணப்ப தொடக்கம்: 07 நவம்பர் 2025 (காலை 10:00 மணி)

  • விண்ணப்ப முடிவு: 06 டிசம்பர் 2025 (மாலை 6:00 மணி)

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!