TANUVAS- ல் Lab Attendant வேலை – 40+ காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

0

TANUVAS- ல் Lab Attendant வேலை – 40+ காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

Lab Attendant, Project Technical Support-I பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் ஆனது சமீபத்தில் வெளியிட்டது. இப்பணிக்கென மொத்தம் 42 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
TANUVAS காலிப்பணியிடங்கள்:

Lab Attendant, Project Technical Support-I பணிக்கென காலியாக உள்ள 42 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு / B.Sc / DMLT / M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TANUVAS வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது பணியின் அடிப்படையில் 40, 50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.36,400/- ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TANUVAS தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் hodabtmvc@tanuvas.org.in எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 07.04.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!