TANUVAS- ல் தேர்வில்லாத வேலை – முழு விவரங்களுடன் || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!
TANUVAS காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Lab Attendant, Project Technical Support-I பணிக்கென காலியாக உள்ள 42 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு / B.Sc / DMLT / M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
TANUVAS வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது பணியின் அடிப்படையில் 40, 50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.36,400/- ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TANUVAS தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் hodabtmvc@tanuvas.org.in எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 07.04.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.


























