TANCET தேர்வர்களின் கவனத்திற்கு – Admit Card  மற்றும் பதிவிறக்கும் முறை குறித்த முழு விவரங்களுடன்..!!

0
TANCET ???????????? ??????????? - Admit Card  ??????? ???????????? ???? ??????? ???? ????????????..!!
TANCET தேர்வர்களின் கவனத்திற்கு - Admit Card  மற்றும் பதிவிறக்கும் முறை குறித்த முழு விவரங்களுடன்..!!

TANCET தேர்வர்களின் கவனத்திற்கு – Admit Card  மற்றும் பதிவிறக்கும் முறை குறித்த முழு விவரங்களுடன்..!!

அண்ணா பல்கலைக்கழகம் ஆனது தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு TANCET மற்றும் Ceeta  ஆகிய தேர்வுகள் குறித்த அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது.  தகுதியானவர்கள் 26.02.2025ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. மேலும், MBA படிப்பில் சேர  TANCET தேர்வு தேர்ச்சி கட்டாயமாகும்.  அதேபோன்று,  M.E., M.Tech., M.Arch., M.Plan. ஆகிய முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர பொது பொறியியல் நுழைவுத் தேர்வில் (சீட்டா) தேர்ச்சி பெறுவதும்  அவசியமானதாகும்.

இதற்காக, அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் TANCET தேர்வு 22.03.2025ம் தேதியும், சீட்டா தேர்வு 23.02.2025ம் தேதியிலும்  நடைபெற உள்ளது. இந்நிலையில்,  TANCET மற்றும் Ceeta தேர்வு எழுதுபவர்களுக்கான Admit Card எப்போது வெளியாகும் என பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில்  TANCET-ன் அதிகாரப்பூர்வ தளத்தில் இன்று வெளியாகும் என தோராயமாக(Tentatively) தெரிவிக்கப்பட்டுள்ளது. TANCET மற்றும் Ceeta தேர்வு எழுதுவதற்கு Admit Card கட்டாயமானதாகும். எனவே, இத்தேர்வுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் பயன்படுத்தி Admit Card-ஐ டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

Admit Card டவுன்லோட் செய்வது எப்படி?

tancet.annauniv.edu என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும்.

ஹால் டிக்கெட் பதிவிறக்கம் இணைப்பைக் கிளிக் செய்யவும்.

உங்கள் உள்நுழைவு சான்றுகளை உள்ளிடவும் (பதிவு எண் மற்றும் கடவுச்சொல்).

உங்கள் ஹால் டிக்கெட் பார்க்க சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.

பின்பு அதை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!